லேபர் திரை விமர்சனம் ரேட்டிங் –2 /5

நடிகர் நடிகைகள் – முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஆறுமுக முருகன், ஜீவா சுப்ரமணியன் (திருநங்கை), பரோஸ்கான், கயல்,  மற்றும் பலர்.

இயக்கம் – சத்தியபதி.

ஒளிப்பதிவு – சத்தியபதி.

படத்தொகுப்பு – கணேஷ்குமார்.

இசை – நிஜில் தினகரன்.

தயாரிப்பு –  ராயல் ஃபார்சசுனா கிரியைஷனஸ்.

ரேட்டிங் –2 /5

கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பல விதமான பிரச்சனைகளையும் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் ‘லேபர்’.

சென்னையில் வசிக்கும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் திரைப்படம்தான்.

கட்டிட தொழிலில் வேலை செய்யும் மேஸ்திரியாக வேலை செய்யும் கதைநாயகன் ஆறுமுகம் முருகன் தனது மகனை என்ஜினீயருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தனது மகனை இன்ஜினியருக்கு படிக்க வைக்க பணம் அதிகமாக தேவைப்படுவதால்.

தனது மகனுக்காக காலேஜில் இன்ஜினியரிங் படிக்கும் மகனின் ஃபீஸ்க்காக பணம் தேவைப்படவே நிறைய பேர்களிடம் கடன் கேட்டுச் செல்கிறார்.

மற்றொரு பக்கம் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமை காத்திருக்கிறது.

தனது மகனின் காலேஜ்யில் கட்டவேண்டிய  ஃபீஸ்க்காக கடன் கேட்ட இடத்தில் பணம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? தனது மகளின் திருமணத்தை நடத்தினாராம்? நடத்தவில்லையா? என்பதுதான் லேபர் திரைப் படத்தின் மீதிக்கதை.

நடிகர்யோகி பாபுவை போல் இருக்கும் ஒருவரை தேடிப்பிடித்து லேபர் திரைப்படத்திற்கு கதைநாயகன் ஆக்கியிருக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆறுமுகம் முருகன் கட்டிட மேஸ்திரி கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பொருந்துகிறார்.

ஆறுமுகம் முருகன் நடிப்பில் மிக அருமையாக நடித்திருக்கிறார்

அவர் மகனின் படிப்புக்காக காலேஜில் கட்டவேண்டிய பணத்தை ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்பது கதாநாயகன் ஆறுமுகம் முருகனின் நடிப்பு ஒரு தந்தையின் பரிதவித்து எப்படி இருக்குமோ அப்படியே மிக அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதே கட்டிடத்தில், கொத்தனாராக வேலை செய்கிற முத்துவும், சரண்யாவும் கணவன்-மனைவி.

முத்து ஒரு குடிகாரன் எல்லோரும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவான்.

கணவர் முத்து திருந்தாதை எண்ணி சரண்யா ரவிச்சந்திரன் கவலைப்படுகிறார்.

கொடுத்த கதாபாத்திரத்தை முத்துவும் சரண்யா ரவிச்சந்திரனும் மிக அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

கணவன் குடித்துவிட்டு வந்ததைப் பார்த்து சரண்யா ரவிச்சந்திரன் அழுது புலம்புவது.

திருநங்கை பட்ரோஸ் கதாபாத்திரத்தில் சிவசுப்பிரமணியன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

திருநங்கை பட்ரோஸ் அடிவாங்குவது ஆகிய காட்சிகள் மனதை உருகவைக்கும் வைக்கிறார்.

கட்டிடத் தொழிலில் வேலை செய்யும் அனைவரும் ஏலச் சீட்டில் சேர்ந்து சிறுக சிறுக பணம் கட்டுகிறார்கள்.

இதற்காக ஏல சீட்டு நடத்தும் ஒரு  தம்பதியரிடம் ஏலச்சீட்டு காண பணத்தை அனைவரும் கட்டுகிறார்கள்.

அந்த தம்பதிகள் திரைப்படத்துறையில்
திரைப்படம் தயாரிக்க விரும்புகிறார்கள்.

ஏல சீட்டின் மூலம் வசூலான தொகை முழுவதையும் திரைப்படத்துறையில் முதலீடு செய்கிறார்கள்.

காவல் நிலையத்தில் சீட்டுக்கட்டிய அனைவரும் புகார் தெரிவிக்கிறார்கள் இதை காவல்துறை அதிகாரி விசாரிக்கிறார்கள்.

இதனால் அவர்களால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது.

இந்த நிலையில், முத்து தலையில் அடிபட்டு இறந்து போகிறார்.

கணவரை இழந்த சரண்யாவும், வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெள்ளையும் வாழ்க்கையில் இணைகிறார்கள்.

இருவரும் கைகோர்த்தபடி செல்வது போல், படம் முடிகிறது.

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை இயல்பாக படமாக்கியிருப்பதற்காக டைரக்டர் சத்தியபதியை பாராட்டலாம்.

கதையும், காட்சிகளும் மெதுவாக நகர்வதை தவிர்த்து, விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நிஜில் தினகரன் இசை மற்றும் பின்னணி இசையிலும் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘லேபர்’ திரைப்படம் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

error: Content is protected !!