தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை காலமானார்.

சென்னை 14 மார்ச் 2021

2003 ல் இயற்கை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் எஸ் பி ஜனநாதன்.

இவர் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை தேசிய விருதினை வென்றது.

இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கரை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன.

இவர் இயக்குனர் சங்கத்தின் பொருளாலராக உள்ளார்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

அதை தொடர்ந்து ஜீவா நடித்த ‘ஈ’, ஜெயம்ரவி நடித்த ‘பேராண்மை’ விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடித்த புறம்போக்கு போன்ற படங்களை தந்தவர்.

பூலோகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இருவரையும வைத்து ‘லாபம்’  திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஜனநாதன் யாரும் தொடாத பேசாத “பிட் காய்ன்” கதையை “லாபம்” படத்தில் பேசியிருப்பார்.

இந்த படம் வியாபார ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் நேற்று வீட்டில் மயங்கிய நிலையில், இருந்தை கண்ட அவரின் உதவியாளர்கள் அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

என மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை 10.07 மணிக்கு காலமானார்.