இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய “டெடி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய நடிகர் ஆர்யா தகவல்.
சென்னை 15 ஜூன் 2021
இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய “டெடி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய நடிகர் ஆர்யா தகவல்.
நடிகர் ஆர்யா, அவரது மனைவி நடிகை சாயிஷா நடித்த திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு இமான் இசை அமைத்திருந்தார்.
யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
ஒரு கரடி பொம்மைக்குள் புகுந்து கொண்ட ஒரு பெண்ணின் உயிர் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஆர்யாவின் துணையோடு பழிவாங்கும் கதை.
கூடவே மருத்துவ உலகில் நடக்கும் உறுப்பு திருட்டு மாபியாவையும் பற்றி இந்த திரைப்படம் பேசியது.
கடந்த மார்ச் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
(ஜுன் 13) விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.
இது தொடர்பாக நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது…
என்னுடைய படம் டெடி ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
குழந்தைகள் இந்த படத்தை திரும்ப, திரும்ப பார்த்து மகிழ்ந்தார்கள்.
இமானின் பாடல்கள்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பானதும் சந்தோஷமாக இருக்கிறது.
டெடி 2ம் பாகத்துக்கான வேலைகளில் நம்ம ஊர் கிறிஸ்டோர் நோலன் (ஹாலிவுட் இயக்குனர்) சக்தி சவுந்தர்ராஜன் இறங்கி விட்டார்.
கண்டிப்பாக 2ம் பாகம் பண்ணப் போகிறோம்.
நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்றார்.
https://twitter.com/arya_offl/status/1403933090267865088?s=19











