தீர்ப்புகள் விற்கப்படும் திரை விமர்சனம் ரேட்டிங் –3 25 /5

நடிகர் நடிகைகள் – சத்யராஜ், யுவன், ஸ்மிருதி வெங்கட், மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், சார்லி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ், சூப்பர்குட் சுப்பிரமணி, கஜராஜ், ஜீவா ரவி, பாண்டிரவி, பாண்டி செல்வம், கலையரசன், லொள்ளு சபா மனோகர், லிஸி ஆண்டனி, மற்றும் பலர்.

இயக்கம் – திரன்.

ஒளிப்பதிவு – கருடவேகா ஆஞசி.

படத்தொகுப்பு – நெஃபல் அப்துல்லா.

இசை – பிரசாத் எஸ் என்.

தயாரிப்பு – அல் டாரி மூவீஸ்.

ரேட்டிங் –3 25 /5

இந்திய நாட்டில் நடக்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலரிடம் உள்ளது.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை கொடுமைப்படுத்தும் ஆண்களை தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒரு அதிரடியான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரன்.

கதாநாயகன் சத்யராஜ் ஒரு அரசாங்கத்தில் பணி புரியும் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.

அவரது ஒரே மகள் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்டும் ஒரு டாக்டர் தான்.

தனது மகள் கதாநாயகி ஸ்மிருத்திக்கும் டாக்டரான யுவன் மயில்சாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கதாநாயகி ஸ்மிருத்தியை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள்.

தனது மகள் கதாநாயகி ஸ்மிருத்திக்கு நேர்ந்த இந்த பெரும் பாலியல் பலாத்காரம்
கொடுமையை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் கதாநாயகன் சத்யராஜ்.

பாலியல் பலாத்காரம் செய்த அந்த மூன்று இளைஞர்களில் ஒருவரது தந்தையான கோடீஸ்வரர் மதுசூதனன் அவரது பண பலத்தால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறார்.

இதனால், ஆத்திரமடையும் கதாநாயகன் சத்யராஜ், அந்த மதுசூதனின் மகனைக் கடத்தி, அவரது ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்து எடுத்து விடுகிறார்.

அந்த உறுப்பைத் தர வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும் என மதுசூதனனுக்கு நிபந்தனை வைக்கிறார் கதாநாயகன் சத்யராஜ்.

பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கும் தண்டனை கிடைத்ததா? கிடைக்கவில்லையா?
வெட்டியா ஆணுறுப்பை ஆபரேஷன் செய்து ஓட்ட வைத்தார்களா ? இல்லையா? அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படத்தின் மீதிக் கதை

இந்த திரைப்படத்தில் பச்சைத்தமிழன் சத்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சத்யராஜ் இளமை தோற்றத்துடன் குற்றவாளிகளைக் கடத்தப்பட்ட நிலையில் அறிமுகமாகிறார்.

தனது மகளின் நிலைக்காக மனம் கலங்குவதும், கோபத்தில் முகம் சிவப்பதும், கவலைப்படாமல் வில்லனின் தவிப்பதை ரசிப்பதும் என்று அட்டகாசம் செய்திருக்கிறார்.

கதாநாயகியாக இநத தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.

Read Also  அரண்மனை 3 திரை விமர்சனம். ரேட்டிங் –3.25 /5

கதாநாயகன் சத்யராஜ் மகளாக கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அமைதியான நடிப்பில் நம்மைக் கவர்கிறார்.

தந்தை மீது அன்பான ஒரு மகளாக ஸ்மிருதி வெங்கட். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

அவரது கணவராக வரும் யுவன் மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

சார்லி ஒரு சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

திரைப்படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் முழுவதும் பயணிக்கும் ஹரீஸ் உத்தமன், மதுசூதனன் இருவரும் பதைக்க வைக்கும் மனிதர்களாக வந்து, பரிதவிப்பது விறுவிறுப்பு.

ஒளிப்பதிவாளர் கருட வேகா ஆஞ்சியின் கடும் உழைப்பு தெரிகிறது.

இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் திரில்லர் திரைப்படங்களுக்கு தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு சின்ன விஷயத்தைக் கையிலெடுத்துப் பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன்.

சீக்கிரம் வெட்டப்பட்ட ஆணுறுப்பு கிடைத்து விடவேண்டுமே என்கிற பரிதாபம் நமக்கும் வந்து விடுகிறது.

கிளைமேக்ஸ் காட்சி ரசிக்க வைக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை தரலாம் என்று இயக்குநர் தீரன் சமுதாய நோக்கோடு இந்த திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தீரன்.

சமீபத்திய இளம்பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு தாங்களே துணிச்சலுடன் களம் இறங்க ஆரம்பித்திருக்கும் அளவுக்கு பாலியல் குற்றம் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் திரைப்படம் வந்திருப்பது மிகவும் பொருத்தம்.

திரைக்கதையில் மட்டும் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் படத்தில் ஒரு வேகம் கிடைத்திருக்கும்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் சில மட்டும்தான் அலைக்கழிப்பால் தடுமாற்றமாக இருக்கிறது.

அதன்பிறகு காட்சிகள் விறுவிறுப்பாகவே நகர்கின்றன.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு இந்த திரைப்படத்தில் காட்டப்படும் கடும் தண்டனைகளை சட்டப்படி நிறைவேற்றினால் அந்தக் கொடுமைகள் கண்டிப்பாகக் குறையும். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் சரியான பயம் வரும்.

மொத்தத்தில் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம் இந்த காலத்தின் ஏற்றத் திரைப்படம்.