Thursday, July 29
Shadow

தளபதி பிறந்த நாள் அன்று முப்பெரும் விழா வேற லெவல் சந்தோசத்தில் தளபதி ரசிகர்கள்.

சென்னை 18 ஜூன் 2021

தளபதி பிறந்த நாள் அன்று முப்பெரும் விழா வேற லெவல் சந்தோசத்தில் தளபதி ரசிகர்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த தளபதி 65 திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிரச்சினையால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் 21ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து அவரின் அடுத்த திரைப்படமான ‘தளபதி 66’ திரைப்படம் குறித்த தகவல்களும் வருகின்றன.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள ’தளபதி 66’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாளில் ’தளபதி 66’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தளபதி 65 + தளபதி 66 + விஜய் பர்த்டே.. இப்போ சொல்லுங்க இதை விட தளபதி விஜய் ரசிகர்களுக்கு வேறென்ன முப்பெரும் விழா இருக்க போகிறது..??