எப்ஃ.ஐ.ஆர் திரை விமர்சனம் ரேட்டிங் 3.75 / 5

நடிகர் நடிகைகள்  – விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன்,
ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், அமான், மாலா பார்வதி, ஆர்என்ஆர் மனோகர், கௌரவ் நாராயணன், பிரவீன் குமார், ITIS பிரசாந்த், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரேம் சி, பிரவீன் கே, ராகேஷ் பிரம்மானந்தன், வினோத் கைலாஷ், மற்றும் பலர்.

இயக்கம் – மனு ஆனந்த்.

ஒளிப்பதிவு – அருள் வின்சென்ட்.

படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே.

இசை – அஸ்வத்.

தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் – 3.75 /5

நாட்டுப் பற்று, இஸ்லாமியர்கள் தீவிரவாதம் பலவற்றை மையமாக வைத்து கொண்டு கடந்த பல வருடங்களாகவே பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என இந்த நாட்டில் முத்திரை குத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறும் அந்த வரிசையில் வந்துள்ள திரைப்படம்தான் எஃப் ஐ ஆர்.

ஒரு த்ரில்லர் எஃப் ஐ ஆர் கதையை தீவிரவாதத்துடன் சேர்த்து மிகவும் பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனு அனந்த்.

அதைச் சுற்றி வளைத்து, கொஞ்சம் குழப்பமான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞராக கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக பல கம்பெனிகளில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்
கதாநாயகன் விஷ்ணு விஷால்.

இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது.

எங்கு இன்டர்வியூக்குச் சென்றாலும் ‘நீங்கள் மத ஈடுபாடு உடையவரா’ என கேள்வி எழுப்புகிறார்கள்.

ஐஐடியில் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்து முடித்த கதாநாயகன் விஷ்ணு விஷால் சாதாரண தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் வேலையில் பணியாற்றுகிறார்.

எனவே, தான் வேலை பார்க்கும் கெமிக்கல் கம்பெனியிலேயே முழுமூச்சாக வேலை செய்ய இறங்குகிறார்.

கதாநாயகன் விஷ்ணு விஷாலின் தாய் சென்னை திருவல்லிக்கேணி உள்ள காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே, இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் அபுபக்கர் அப்துல்லா இந்தியாவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வருகிறது.

இதே நேரத்தில் அபுபக்கர் அப்துல்லா என்னும் இஸ்லாமிய தீவிரவாதியை தேசிய புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர்.

அதை விசாரிக்கும் NIA தேசிய புலனாய்வு குழுவிற்கு கதாநாயகன் விஷ்ணு விஷால் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வருகிறது

கதாநாயகன் விஷ்ணு விஷாலை தேசிய புலனாய்வு குழுவை சேர்ந்த அதிகாரிகள் பின் தொடர்கிறார்கள்.

தனது கம்பெனி வேலை காரணமாக ஹைதராபாத் சென்று வரும் கதாநாயகன் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் கதாநாயகன் விஷ்ணு விஷாலின் செல்போன் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணாமல் போகிறது.

இந்த செல்போனை வைத்து விமான நிலையம் அருகே வெடிகுண்டு வெடிக்கிறது.

கதாநாயகன் விஷ்ணு விஷாலை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்கின்றனர்.

இதையடுத்து தேசிய புலனாய்வு குழுவினரால் தேடப்படும் வரும் அபுபக்கர் அப்துல்லா கதாநாயகன் விஷ்ணு விஷால்தான் என்று முடிவு செய்து செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் நான் தீவிரவாதி அல்ல என்று நிரூபிக்கப் போராடுகிறார் கதாநாயகன் விஷ்ணு விஷால்.

ஒரு கட்டத்தில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் கதாநாயகன் விஷ்ணு விஷால்.

இறுதியில் போலீஸ் பிடியில் இருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? இல்லையா?உண்மையான தீவிரவாதி அபுபக்கர் அப்துல்லா யார்?
அதன்பின் என்ன நடக்கிறது
என்பதுதான் இந்த எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த எப்ஃ ஜ ஆர் திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.

வழக்கமான விஷ்ணு விஷாலாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட
இஸ்லாமிய இளைஞராக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

இர்பான் அகமது என்ற ஐஐடி படித்து முடித்து இஸ்லாமிய இளைஞராக தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் விஷ்ணு விஷால்.

அதற்கேற்ற தோற்றம், தாடி, கண்கள் என கதாபாத்திரத்தை ஏற்றது போல் உள்வாங்கி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விஷ்ணு விஷால் சாது, தாய்பாசம், ஆக்‌ஷன் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

குறிப்பாக, மதத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

NIA நடத்தும் கடுமையான விசாரணையில் சிக்கித் தவித்து தான் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை எனக் கதறும் போது கலங்க வைக்கிறார்.

திரைப்படத்தில் அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

NIA தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் கனக்கச்சிதமாக பொருந்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தனக்கே உரிய பாணியில் ஸ்டைலிஷாக பேசி அசத்தி இருக்கிறார்.

என்.ஐ.ஏ.வின் மற்றொரு அதிகாரிகளாக வரும் ரைசா வில்சன், ரெபா மோனிகாஜான் ஆகியோர் ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார்கள்.

வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் கொடுத்த வேலையை மிக அருமையாக செய்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

துப்பறியும் ஆக்‌ஷன் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

அதுபோல், ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் கடுமையாக உழைத்திருக்கிறார்

ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா ஆகியோர் மேக்கிங்கில் இயக்குனருக்கு நிறையவே உதவியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

இவருடைய பின்னணி இசை திரைப்படத்திற்கு மிக பலம்.

சில தேவையற்ற காட்சிகள் மற்றும் தேவையற்ற
கதாபாத்திரங்களை நீக்கி, திரைக்கதையையும் சுற்ற விடாமல் செய்திருந்தால் இந்த முதல் தகவல் அறிக்கை FIR முத்தான முதல் தகவல் அறிக்கையாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ‘எப்.ஐ.ஆர்.’ திரைப்படம் பையர்.

error: Content is protected !!