தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தெறிக்கவிட்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

சென்னை 21 ஜூன் 2021

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தெறிக்கவிட்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

தளபதி விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது தளபதி 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி தளபதி 65ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தனது 65 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

தளபதி 65 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த தளபதி 65 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா பகுதியில் முடிவடைந்து விட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று 21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தளபதி 65 திரைப்பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளது என்பதை அறிவித்து இருந்தனர்.

அதன்படி BEAST என தலைப்பு வைத்து அறிவித்துவிட்டனர்.