சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்களையும் வழங்கினார் தயாரிப்பாளர் திரு.பெப்சி சிவா.
பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய அரசும் , மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், ஊரடங்கு உத்தரவு காரணமாக
நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு., 65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட நமது சினிமா பத்திரிகையாளர் சங்கம்
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு. அனைத்து திரைப்பட விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சினிமா பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகவும்
சினிமா பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் ., இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத காரணத்தால் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும். இதை கேள்விப்பட்ட
திரு. பெப்சி சிவா அவர்கள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து உடனடியாக உதவி வழங்கினார்.
விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் ‘தமிழரசன் ‘திரைப்படத்தினை தயாரித்து வரும் எஸ் என் எஸ் மூவிஸ் (ஸ்ரீ நந்திமேடு செல்லியம்மன் மூவிஸ்) பட அதிபரும் , பெப்சி அமைப்பின் முன்னாள் செயலாளருமான திரு.பெப்சி சிவா அவர்கள் ரூ 1,37,000 /- (ஒரு லட்சத்து முப்பத்தேழாயிரம்) மதிப்புடைய அத்தியாவசிய மளிகை பொருட்களையும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு உடனடியாக வழங்கியுள்ளார்.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் D.R.பாலேஷ்வரும் ,
பொது செயலாளர்
R.S. கார்த்திக்கேயன,
பொருளாளர் மதிஒளிகுமாரும்
ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்











