நடிகர் தனுஷ் 43 திரைப்படத்தின் புதிய அதிரடியான அறிவிப்பு.

சென்னை 25 ஜூன் 2021

நடிகர் தனுஷ் 43 திரைப்படத்தின் புதிய அதிரடியான அறிவிப்பு.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் டி 43 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக நடிகர் தனுஷின் 43-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த தனுஷ் 43 திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்
தயாரிக்கிறார்.

இந்த தனுஷ் 43 இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

https://twitter.com/karthicknaren_M/status/1408387511206891529?s=19

error: Content is protected !!