தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை நடிகை குஷ்பூவுக்கே அதிக வாக்குகள் பெற்றுள்ளார்..!

சென்னை 22 மார்ச் 2022 தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை நடிகை குஷ்பூவுக்கே அதிக வாக்குகள் பெற்றுள்ளார்..!

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலின்போது பதிவான வாக்குகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைக்கு எண்ணப்பட்டன.

இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய நிர்வாகப் பதவிகளுக்கான போட்டியில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, தலைமையிலான பாண்டவர்கள் அணியே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

மேலும் 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் பாண்டவர்கள் அணியே பெரும் வாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இவர்களில் நடிகை குஷ்பு அவர்கள் மிக அதிகமாக 1407 வாக்குகளைப் பெற்று செயற்குழு உறுப்பினர் பதவிக்கு முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளின் முழு விபரம்…

1. குஷ்பூ – 1407.

2. கோவை சரளா – 1399.

3. ராஜேஷ் – 1384.

4. மனோபாலா – 1372.

5. அஜய் ரத்தினம் -1365.

6. பசுபதி – 1335.

7. ஜூனியர் பாலையா – 1312.

8. சிபிராஜ் – 1296.

9. லதா – 1288.

10. விக்னேஷ் – 1279.

11. சோனியா போஸ் – 1277.

12. பிரசன்னா – 1275.

13. நந்தா – 1272

14. ரமணா – 1258.

15. தளபதி தினேஷ் – 1258.

16. சரவணன் – 1247.

17. பிரேம்குமார் – 1242.

18. ஸ்ரீமன்  – 1241.

19. ஜெரோல்ட் – 1184.

20. ரத்னப்பா – 1137.

21. மா.பிரகாஷ்  – 1106.

22. வாசுதேவன் – 1105‌

23. ஹேமச்சந்திரா – 1077.

24. காளிமுத்து – 1075

அதிக வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினர் பதவியை கைப்பற்றினார்கள்.

error: Content is protected !!