தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் -நடிகர்கள் நாசர்-விஷால்-கார்த்தி பாண்டவர்கள் அணி அபார வெற்றி..!

சென்னை 21 மார்ச் 2022 தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் -நடிகர்கள் நாசர்-விஷால்-கார்த்தி பாண்டவர்கள் அணி அபார வெற்றி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நடந்த தேர்தலில் புதிய நிர்வாகிகளுக்காக நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

பாண்டவர்கள் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் அவர்களுக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 884 தபாலில் பதிவான வாக்குகள் 817 மொத்தம்1701 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 703 தபாலில் பதிவான வாக்குகள் 351 மொத்த வாக்குகள் 1054 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தலைவர் பதவிக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 1609 தபாலில் பதிவான வாக்குகள் 1178 மொத்தமாக பதிவான வாக்குகள் 2788 வாக்குகள் பதிவானது.

பதிவானதில் செல்லாத வாக்குகள் 33.

நடிகர் நாசர் அவர்கள் 647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

பாண்டவர்கள் அணி சார்பாக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் அவர்களுக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 898 தபாலில் பதிவான வாக்குகள் 882 மொத்த வாக்குகள்
1720 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் ஐசரி கே.கணேஷ் அவர்களுக்கு
நேரடியாக பதிவான வாக்குகள் 687 தபாலில் பதிவான வாக்குகள் 345 மொத்த வாக்குகள் 1032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 1608 தபாலில் பதிவான வாக்குகள் 1179 மொத்தமாக பதிவான வாக்குகள் 2787 வாக்குகள் பதிவானது.

பதிவானதில் செல்லாத வாக்குகள் 35.

நடிகர் விஷால் அவர்கள் 688 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

பாண்டவர்கள் அணி சார்பாக பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தி அவர்களுக்கு
நேரடியாக பதிவான வாக்குகள் 1009 தபாலில் பதிவான வாக்குகள் 818 மொத்த 1827 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பிரசாந்த் நேரடியாக பதிவான வாக்குகள் 568 தபாலில் பதிவான வாக்குகள்
351 மொத்தம் 919 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

பொருளாளர் பதவிக்கு நேரடியாக பதிவான வாக்குகள் 1609 தபாலில் பதிவான வாக்குகள் 1179 மொத்தமாக பதிவான வாக்குகள் 2788 வாக்குகள் பதிவானது.

பதிவானதில் செல்லாத வாக்குகள் 42.

நடிகர் கார்த்தி அவர்கள் 908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் பூச்சி முருகன் 1612 வாக்குகளையும், நடிகர் கருணாஸ் 1605 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் பூச்சி முருகன் நேரடியாக பதிவான வாக்குகள் 821 , தபாலில் பதிவான வாக்குகள் 791 மொத்த 1611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நடிகர் கருணாஸ் நேரடியாக பதிவான வாக்குகள் 801 , தபாலில் பதிவான வாக்குகள் 804 மொத்த 1605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை குட்டி பத்மினி 1015 வாக்குகளையும், நடிகர் உதயா 973 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர்.

இதில் நடிகை குட்டி பத்மினி நேரடியாக பதிவான வாக்குகள் 665 தபாலில் பதிவான வாக்குகள் 350 மொத்தம் 1015 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

நடிகர் உதயா நேரடியாக பதிவான வாக்குகள் 610 வாக்குகளையும், தபாலில் பதிவான வாக்குகள் 363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்

இதில் செல்லாத வாக்குகள் 65.

மேலும் 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் அந்த அணியே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இவர்களில் நடிகை குஷ்புதான் மிக அதிகமாக 1407 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளின் முழு விபரம் :

1. குஷ்பூ – 1407

2. கோவை சரளா – 1399
3. ராஜேஷ் – 1384
4. மனோபாலா – 1372
5. அஜய் ரத்தினம் -1365
6. பசுபதி – 1335
7. ஜூனியர் பாலையா – 1312
8. சிபிராஜ் – 1296
9. லதா – 1288
10. விக்னேஷ் – 1279
11. சோனியா போஸ் – 1277
12. பிரசன்னா – 1275
13. நந்தா – 1272
14. ரமணா – 1258
15. தளபதி தினேஷ் – 1258
16. சரவணன் – 1247
17. பிரேம்குமார் – 1242
18. ஸ்ரீமன்  – 1241
19. ஜெரோல்ட் – 1184
20. ரத்னப்பா – 1137
21. மா.பிரகாஷ்  – 1106
22. வாசுதேவன் – 1105
23. ஹேமச்சந்திரா – 1077
24. காளிமுத்து – 1075

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர்கள் அணி வெற்றி வாகை சூடியது.

error: Content is protected !!