இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் மூன்று கதாநாயகிகள்.
சென்னை 30 மே 2021
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் மூன்று கதாநாயகிகள்.
சிலம்பரசன் டிஆரின் மாநாடு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.
சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.
தற்போது சிலம்பரசன் டிஆர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் வெங்கட்பிரபு
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார்.
இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும்.
இந்த நிலையில், அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபுவின் 10-வது திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.











