தயாரிப்பாளர்கள் செலவு செய்த திரைப்படப் பாடல்களை  இளையராஜா எப்படி உரிமை கொண்டாடலாம் கின்னஸ் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை 05 ஏப்ரல் 2022 தயாரிப்பாளர்கள் செலவு செய்த திரைப்படப் பாடல்களை  இளையராஜா எப்படி உரிமை கொண்டாடலாம் கின்னஸ் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இசைஞானி இளையராஜாவும் மேடைக் கச்சேரிகளில் எம்.எஸ் விஸ்வநாதன், மகாதேவன் மற்றும் தமிழ் இசையமைப்பாளர்களின்  பாடல்களைப் பாடியும்
கச்சேரிகள் நடத்தித்தானே சம்பாதித்தார்.

பல  திரைப்படங்களில் நமது பாரம்பரிய கிராமிய இசையை அப்படியே பயன்படுத்துகிறார்கள் இசை அமைப்பாளர்கள். அதற்காக யாருக்கு ராயல்டி கொடுக்கிறார்கள்?

திரைப்படத்தின் பாடல்கள் இசைக்கு உரிமையாளர்கள்,  தயாரிப்பாளரா இல்லை இசை அமைப்பாளரா என்கிற விவாதம், சட்ட முறைகளையும் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘

2017ஆம் வருடம் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது இசைஞானி ‘இளையராஜா தான் இசையமைத்த திரைப் பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவர்களுக்கு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்துபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது.

இனி இளையராஜா இசையில் உருவான பாடல்களையும், இளையராஜா இசையில் நான் பாடியது உட்பட எந்தப்பாடலையும் தான் மேடையில் பாடமாட்டேன்” என பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவர்கள் கூறினர்.

இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த திரைப்படங்களில் உள்ள பாடல்களை தனது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த கூடாது என்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்க தேவையான  ஸ்டுடியோ வாடகை மற்றும் ஆர்கெஸ்ட்ரா செலவு முதல் அனைவருக்கும் சாப்பாடு டீ காபி மற்றும் மின்சார செலவு வரை அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தான் செய்கின்றனர்.

திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பணத்தில் உருவாக்கிய பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா எப்படி உரிமை கொண்டாட முடியும் என தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்படம் தயாரிப்பதற்கு முன் கதையை முடிவு செய்ததும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முன்பணம் கொடுத்து உறுதிப்படுத்துவார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்களில் அதிக சம்பளம் வாங்குவதே இசையமைப்பாளர்கள் தான்.

அதிலும் இசைஞானி இளையராஜா வேலை செய்யும் திரைப்படங்களுக்கு சம்பளத்தை அவர் தான் முடிவு செய்வார்.

தயாரிப்பாளர்களின் பணத்தில் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.

நியாயமாகப் பார்த்தால் திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் உரிமைகளும் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான் சொந்தம்.

ஆனால் திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளருக்கு கடந்த காலங்களில் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு.

தயாரிப்பாளரிடம் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் சங்கங்களும் சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.

Read Also  உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் பட்சத்தில் முதல் ஆளாக நின்று அதை எதிர்ப்பேன் இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டும் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது.

தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவான பாடலால் பணம் சம்பாதிக்கும் இளையராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் எதுவும் இல்லை.

ஆகையால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக செயற்குழுவை கூட்டி இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவெடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.