இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சென்னை 02 ஜூன் 2021

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி இவருக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து 2019-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து ஆகாஷை முரளி கதாநாயகனாக நடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தனின் கதை மிகவும் பிடித்திருப்பதால் அதில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை அடுத்து ஆகாஷ் முரளி நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட வேலைகளை விஷ்ணுவர்தன் கவனிப்பார் என தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி நடிகர் ஆகாஷ் கதாநாயகனாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாக உள்ளார்.

தல அஜித்குமாரை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

தற்போது இநத ஆகாஷ் முரளி நடிக்கும் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.