Thursday, December 9
Shadow

கொரோனா தொற்றின் கணவர் மற்றும் மகனை இழந்த பிரபல நடிகை கவிதா.

சென்னை 01 ஜூலை 2021

கொரோனா தொற்றின் கணவர் மற்றும் மகனை இழந்த பிரபல நடிகை கவிதா.

தமிழ் திரைப்பட உலகில் தனது 11 வயதில் ‘ஓ மஞ்சு’ என்ற திரைப்படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கவிதா.

அதன் பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என அறியப்பட்டவர் நடிகை கவிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா.

தமிழில் மட்டுமே 50-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கவிதா.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார் நடிகை கவிதா.

இவருடைய மகன் சஞ்சய் ரூப் மற்றும் இவரது கணவர் தசரத ராஜு ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டது.

இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இருவருக்குமே உடல் நிலை மோசமாகி கொண்டே போனது.

மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருந்த
நடிகை கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் ஜூன் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது கணவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்..

இவரது மகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று கவிதாவின் கணவர் தசரத ராஜுவும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

காமெடி நடிகர் பாண்டு, ‘தொரட்டி’ பட ஹீரோ ஷமன் மித்ரு, நடிகர் நிதீஷ் வீரா, இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE