ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு – ஜோக்கர் போக்கர் காமெடி ஷோ மூலம் ஜீ தமிழ் தமது நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகிறது

சென்னை 21 ஏப்ரல் 2022 ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு – ஜோக்கர் போக்கர் காமெடி ஷோ மூலம் ஜீ தமிழ் தமது நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்  போகிறது

20 ஏப்ரல், சென்னை: ஜீ தமிழ் அதன்  துவக்கத்திலிருந்தே தமது நேயர்களுக்கு பொழுது போக்கு நிறைந்த பொருத்தமான நிகழ்ச்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

எண்டர்டெயின்மெண்ட் அம்சங்களை அதிகரிக்க அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் சூழலில், ஜீ தமிழ் இந்த 2022-ஆம் ஆண்டு பல சுவாரஸ்யமான கற்பனை தொடர்களையும், நிஜம் சார்ந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றது.

உங்களது வாழ்க்கையில் ஆரவாரமான சிரிப்பினை அதிகரிக்கவும், ஒவ்வொரு வாரத்தின் மன அழுத்தத்தை இறக்கி வைக்க உதவவும்,  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர் போக்கர் காமெடி நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு ஜீ தமிழ் ஒளிபரப்பவுள்ளது.

கேளிக்கை நிறைந்த இந்த நிகழ்ச்சியில் வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், சில சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டுகளும் உள்ளன.

ஒவ்வொரு வாரமும் 4 பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக இரண்டு சிரிப்பூட்டும் அணிகளாக போட்டியிடுவார்கள்.

ஒரு மெகா பரிசுத்தொகைக்காக

நான்கு சவாலான சுற்றுகளில் அவர்கள் மோதுவார்கள்.

பணத்தை ஊதும் மிஷினுக்குள் போட்டியாளர்களை அனுப்புவது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகும் காமெடியன் யார் என பந்தையம் கட்டுவது, ஒரு பெட்டிக்குள் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் விளையாட்டு, என பல சுவாரஸ்யமான பகுதிகளின் மூலம் நேயர்களை இந்த நிகழ்ச்சி நிச்சயமாக கவரும்.

பிரபல நகைச்சுவை விஜே பப்பு மற்றும் நடிகை சஷ்டிக்கா தொகுத்து வழங்கும் இந்த ஜோக்கர் போக்கர், உங்களது குடும்பத்தின் மொத்த பொழுது போக்கு தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே நிகழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழ ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு ஜோக்கர் போக்கர் நிகழ்ச்சியை காணத்தவராதீர்கள், உங்கள் ஜீ தமிழில் மட்டும்.