ஓ மை டாக் திரை விமர்சனம் ரேட்டிங் – 3.5 /5

நடிகர் நடிகைகள் – அருண் விஜய், அர்னவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய், பானு சந்தர், A. வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், ப்ரியா ராஜ்குமார், ஷ்ரவன், பென்னி, சித்தி, க்ரித்திக், ஜான்கி, spike ‘ ஜான், மீப்பு
மற்றும் பலர்.

இயக்கம் – சரோவ் சண்முகம்.

ஒளிப்பதிவு – கோபிநாத்,

படத்தொகுப்பு – மேகநாதன்.

இசை – நிவாஸ் K பிரசன்னா.

தயாரிப்பு – 2 டி எண்டர்டையின்மெண்ட்

ரேட்டிங் – 3.5 /5

தமிழ் திரைப்பட உலகில் விலங்குகளை மையமாக வைத்து தற்போது அதிகமாக திரைப்படங்கள் வருவதேயில்லை.

விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தேவர் பிலிம்ஸ் காலங்களுக்குப் பிறகு இயக்குனர் இராம நாராயணன் காலத்தோடு முடிந்துவிட்டது.

எப்போதாவது ஒரு முறை தான் விலங்குகளை மையமாக வைத்து இந்த மாதிரியான திரைப்படங்கள் வருகின்றன.

இந்த இரண்டு குறைகளையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்துள்ளது இந்த ஓ மை டாக் திரைப்படம்.

குழந்தைகளுக்காக மட்டுமே இப்படிப்பட்ட ஒரு கதையை உருவாக்கி அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை மனதில் வைத்து கொண்டு இந்த ஓ மை டாக் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம்.

தெலுங்கு திரைப்பட உலகில் தாத்தா நாகேஸ்வரராவ், மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா மூவரும் முதன்முதலாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர்.

அதைப் போல் ஓ மை டாக் திரைப்படத்தில் தாத்தா விஜயகுமார் மகன் அருண் விஜய் பேரன் ஆர்ணவ் விஜய் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான்.

ஊட்டியில் நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் கதாநாயகன் அருண் விஜய். கதாநாயகி மகிமா நம்பியார் பள்ளியில் படிக்கும் மகன் ஆர்னவ் விஜய், தாத்தாவாக விஜயகுமார் ஆகியோருடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார்.

மகன் ஆர்னவ்வை கடன் வாங்கி சர்வதேசப் பள்ளியில் படிக்க வைக்கிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது.

பார்வையற்ற குட்டி நாயைக்கு ‘சிம்பா’ எனப் பெயர் வைத்து வளர்க்க ஆரம்பிக்கிறார் ஆர்னவ் விஜய்.

ஆர்னவ் விஜய் கொடுக்கும் பயிற்சியால் சிம்பா நல்ல திறமையுடன் வளர்கிறது.

அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ் விஜய்.

அதற்கு பார்வை வரவழைத்து நாய் கண்காட்சியில் கலந்து கொள்ள வைக்கிறார்.

Read Also  பஞ்சராக்ஷரம் திரை விமர்சனம்

கண் தெரியாமல் இருக்கும் சிம்பா குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார் வினய்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளப் போகும் போது பணக்காரரான வினய், அவரது நாய் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சிம்பாவிற்கு சில பிரச்சினைகளை கொடுக்கிறார் வினய்.

இந்த ஷோவில் அர்னவ் விஜயின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.

இறுதியில் அர்னவ் விஜயின் சிம்பா டாக் ஷோவில் வெற்றி பெற்றதா? இல்லையா? வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதுதான் ஓ மை டாக் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த ஒ மை டாக் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

அர்னவ் விஜயின் தந்தை கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

அர்னவ் விஜயின் அப்பாவாக கதாநாயகன் அருண் விஜய். பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத ஒரு கதாபாத்திரம்.

எதுவாக இருந்தாலும் தனது மகன் அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் பெருந்தன்மையுடன் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரம் ஆர்னவ் விஜயின் முதல் திரைப்படம் போல தெரியவில்லை.

முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.

கலைக் குடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபித்துள்ளார்.

அந்த வயதில் சிறுவர்களுக்கு வரும் கோபம், பாசம், சுட்டித்தனம், நம்பிக்கை என பலதரப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம்.

அனைத்தையும் எளிதில் சமாளித்து இயல்பாய் நடித்திருக்கிறார்.

ஆர்னவ் விஜயின் அம்மாவாக மகிமா நம்பியார்.

கதாநாயகி மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் அருண் விஜய்க்கே அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத போது மகிமா நம்பியாருக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும்.

கிடைத்துள்ள காட்சிகளில் பாசமான அம்மாவாய் முத்திரை பதித்துள்ளார்.

ஆர்னவ் விஜயின் தாத்தாவாக விஜயகுமார், நடுத்தரக் குடும்பத்து தாத்தாவை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

விஜயகுமார் மற்றும் அர்னவ் விஜயிடம் கோபம் மற்றும் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

பணக்கார வில்லனா, கூப்பிடுங்கள் வினய்யை என்றாகிவிட்டது.

ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.

அர்னவ் விஜயின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி திரைக்கதை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம்.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நாயிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள் அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் இந்தக் காலக் குழந்தைகளுக்காக ஆங்கிலக் கலப்புடன் சில பாடல்கள் அருமை.

Read Also  சைரா நரசிம்மரெட்டி - திரை விமர்சனம்

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரிய பலம்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை அப்படியே பதிவு செய்துள்ளது.

அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப கலர் புல்லாக அமைந்துள்ளது.

தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் மேகநாதன்.

நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஆர்னவ் விஜயின் கதாபாத்திரம் மூலாமகவும், சிம்பா என்னும் நாய் குட்டி மூலமாகவும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம்.

குழந்தைகளுக்கும், நாய் பிரியர்களுக்கும் பிடிக்கும்.

மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கலாம்.