நாய் சேகர் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – சதீஷ், பவித்ரா லட்சுமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், ஜார்ஜ் மரியன், கிஷோர் ராஜ்குமார், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, KPY பாலா ஞானசம்பந்தம், மற்றும் பலர்.

இயக்கம் – கிஷோர் ராஜ்குமார்.

ஒளிப்பதிவு – பிரவீன் பாலு.

படத்தொகுப்பு – ராம் பாண்டியன்.

இசை – அஜேஷ்.

தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.

ரேட்டிங் –3.5 /5

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்த சதீஷ் இந்த நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஒரு சுவாரசியமான லாஜிக் இல்லா மேஜிக் காமெடிப் திரைப்படமாக வந்திருக்கிறது நாய் சேகர் திரைப்படம்.

சிறுவர், சிறுமியர்களுக்கு காமெடி திரைப்படம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

‘ஸ்பைடர்’ கடித்தால் ‘ஸ்பைடர் மேன்’ வந்த மாதிரி, ‘நாய்’ கடித்ததால் ‘நாய் சேகர்’, வந்துவிட்டார்.

ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர் கதாநாயகன் சதீஷ்.

அவரது வீட்டுக்குப் பக்கத்தில் வீட்டில் வழக்க கூடிய விலங்குகள், பறவைகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஜார்ஜ் மரியான்.

ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார்.

ஒரு தவறான ஆராய்ச்சிக்காகத் தடை செய்யப்பட்டவர் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான்.

அவர் ஆராய்ச்சிக்காக வைத்திருக்கும் நாய் ஒன்று, பக்கத்து வீட்டு கதாநாயகன் சதீஷைக் கடித்து விடுகிறது.

அதனால், கதாநாயகன் சதீஷுக்கு அந்த கடித்த நாயின் குணம் வந்துவிடுகிறது.

கதாநாயகன் சதீஷைக் கடித்த நாய்க்கு பேசும் சக்தியுடன் மனித குணம் வந்து விடுகிறது.

இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் கதாநாயகன் சதீஷ்க்கு வருகிறது.

இதனால், கதாநாயகன் சதிஷ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது.

இதனால், கதாநாயகன் சதீஷ் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன

மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது.

இறுதியில் நாய் கிடைத்ததா? கதாநாயகன் சதிஷ் மனிதனாக மாறினாரா? இல்லையா ? என்பதுதான் இந்த நாய் சேகர் திரைப்படத்தின் மீதிக்கதை.

தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஷ்

இந்த நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாயாக குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் கதாநாயகன் சதிஷ்.

நாய் மாதிரி நடிப்பதற்கெல்லாம் கூச்சப்படாமல் நடித்ததற்குப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

குக் வித் கோமாளி’ சீசன் 2ல் பங்கேற்ற பவித்ர லட்சுமி தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகி.

கதாநாயகன் சதீஷின் காதலியாக நடித்திருக்கிறார்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஓரளவிற்கு நடித்தும், மற்ற நேரங்களில் சிரித்தும் வைக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாய்க்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் மிர்ச்சி சிவா ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.

வீட்டு விலங்கு, பறவைகள் ஆகியவற்றை வைத்து ‘டிஎன்ஏ’ மாற்றம் வரை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக ஜார்ஜ் மரியான்.

அந்தக் கால இசையமைப்பாளர்களான சங்கர்-கணேஷ் இரட்டையரில் கணேஷ் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்புப் பக்கம் வந்திருக்கிறார்.

இப்படியான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரமெல்லாம் தமிழுக்குக் கொஞ்சம் புதுசுதான்.

இவரது உதவியாளராக மாறன், பாஸை விட அதிகம் பேசி சிரிக்க வைக்கிறார்.

கலக்கப்போவது யாரு பாலா காட்சிக்கு காட்சி படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்த நாய் சேகர் திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்.

மெதுவாக முதல பாதி ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து இடைவேளைக்குப் பிறகு இறுதியில் வயிறு குலுங்க சிரிப்போடு முடித்து இருக்கிறார்.

கதாபாத்திரங்களில் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

குறிப்பாக கதாநாயகன் சதிஷின் திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

அஜீஷும் மற்றும் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் பொழுது கண்களுக்கு மிகவும் பிரஷாக காட்சி அளிக்கிறது.

மொத்தத்தில் ‘நாய் சேகர்’ திரைப்படம் கலகலப்பு நிறைந்த குழந்தைகளோடு குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!