கல்லூரி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்ஃபி திரைப்படத்தின் இயக்குனர் மதிமாறன்.

சென்னை 23 ஏப்ரல் 2022 கல்லூரி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட செல்ஃபி திரைப்படத்தின் இயக்குனர் மதிமாறன்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) ‘சம்பிரதா’ என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செல்ஃபி திரைப்படத்தின் இயக்குனர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார்

அப்போது அவர் கூறியதாவது…

முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

செல்ஃபி திரைப்படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புரான் என்று எழுதியிருப்பேன்.

இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது.

எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும்.

நானும் இன்ஜினியரிங் படித்தவன்.

எனது நண்பன் ஒருவன் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கார் வாங்கினார்.

சில பிரச்சினைகளால் அந்த காரை விற்றான்.

அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் .

அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன்.

கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார்.

அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.

கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி.

அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான்.

அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று.

மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!