செல்ஃபி திரை விமர்சனம் ரேட்டிங் – 4.25 /5

நடிகர் நடிகைகள் – ஜி வி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா, குணாநிதி, சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர், தங்கதுரை, சாம் பால், நாயகம், ஸ்ரீஜா ரவி, ஜெய்சங்கர், மற்றும் பலர்.

இயக்கம் – மதிமாறன்.

ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி.

படத்தொகுப்பு – எஸ் இளையராஜா,

இசை – ஜி வி பிரகாஷ் குமார்.

தயாரிப்பு – டி.ஜி. பிலிம் கம்பெனி.

ரேட்டிங் – 4.25 /5

தாம் பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் சொத்து பணம் இல்லை என்றால் பரவாயில்லை கல்வி என்னும் பெரும் சொத்து மட்டும் இருந்தால் போதும் நமது குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள்.

அப்படி அந்த கல்வியை கூட பெற வேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தனது சொத்துக்களை விற்றுதான் அந்தக் கல்வியை கூட தனது குழந்தைகளுக்கு கொடுக்க முடிகிறது.

இன்று நடக்கும் கல்வி கொள்ளையை செல்ஃபி திரைப்படத்தில் படம் பிடித்து காட்டுகிறார் எனக் கூறுவதை விட கல்விக் கொள்ளையை தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன்.

தமிழ் திரைப்பட உலகில் இதுவரை சொல்லப்படாத கதை என தாராளமாகச் சொல்லலாம்.

மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என அழைக்கப்படும் சீட்டுகளுக்கு எப்படி நன்கொடை (?) வசூலிக்கிறார்கள்.

எப்படிப்பட்டவர்கள் யார் யாரெல்லாம் புரோக்கராக ஈடுபடுகிறார்கள் என
இதில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மதி மாறன்.

இப்படி ஒரு புதிய கதை களத்தை எடுத்துக் கொண்டதற்காக அறிமுக இயக்குனர் மதிமாறனை பாராட்டலாம்.

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.

தன் படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படுக்கிறார் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார், கல்லூரியில் மாணவர்களை மற்றும் நண்பர்கள் சேர்த்துவிடும் புரோக்கர் வேலை செய்யலாம் என என்னம் வருகிறது.

படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு புகழ் பெற்ற ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் சீட்’டிற்கு மாணவர்களைப் பிடித்தும் தரும் ‘புரோக்கர்’ வேலையை நண்பர்களுடன் சேர்ந்து செய்ய ஆரம்பிக்கிறார் கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் குமார்.

முதலில் சிறியதாக சம்பாதிக்கும் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அதில் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார், தனது உயிர் நண்பன் குணாநிதி தற்கொலை செய்து கொள்கிறார்.

இருப்பினும் மீண்டும் அந்த ‘புரோக்கர்’ வேலையில் இறங்கி நண்பன் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்.

Read Also  ராக்கி தி ரிவெஞ்ச் - திரைவிமர்சனம்

இறுதியில் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதுதான் செல்ஃபி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த செல்ஃபி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ளார்.

இஞ்சினியரிங் கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் கதாநாயகன் ஜி.வி பிரகாஷ்குமார்.

அவரைக் கல்லூரி மாணவர் என்று சொன்னால் நம்ப முடிகிறது.

தன்னை விட அனுபவம் வாய்ந்த ஒருவரை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட ஒரு கதாபாத்திரம். வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் கல்லூரி மாணவர்களை காதலனா, ரவுடியாக மட்டுமே காட்டுவார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக ஒரு புரோக்கர் ஆகக் காட்டியிருக்கிறார்கள். அசால்ட்டான ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாய் நடித்திருக்கிறார் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார்.

நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

குறிப்பாக தந்தை வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.

தனது நண்பன் குடும்பத்திற்கு அவர் செய்த உதவி பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

அந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் முக்கியமான சீட்டு வாங்கித்தரும் புரோக்கராக ரவி வர்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.

அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார்

சமீப காலமாக தமிழ் திரைப்பட உலகில் சில ‘யுனிக்’ ஆன கதாபாத்திரங்களில் நடிக்க கவுதம் வாசுதேவ் மேனனைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்கள்.

அவர்களது தேர்வுக்கு ஏற்றபடி சரியாக நடித்துக் கொடுக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

கதாநாயகி வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகி வர்ஷா பொல்லம்மாவுக்குப் திரைப்படத்தில் பெரிய வேலையில்லை.

அடிக்கடி கதாநாயகி ஜி.வி பிரகாஷ் குமாரை தேடிச் சென்று அளவாக காதலித்துவிட்டுப் போகிறார்.

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி நடிப்பில் கண்கலங்க வைத்துவிட்டார்.

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் நண்பனாக டி.ஜி.குணாநிதி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் பரபரப்பாக நடித்து அதே பரபரப்புடன் திரைப்படத்தில்
பாதியில் கதாபாத்திரம் முடித்து விடுகிறார்.

இவருக்கு முதல் திரைப்படமே மிக சிறப்பான அறிமுகம்தான்.

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தையாக வாகை சந்திரசேகர். தன் மகன்கள், மகள்கள் படிப்பு, வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கனவு காணும் சராசரி தந்தையாக கண் கலங்க வைக்கிறார்.

தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் மிக அருமையான தேர்வு.

Read Also  மீண்டும் ஒரு மரியாதை திரை விமர்சனம். ரேட்டிங் - 2./5

குணாநிதியின் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீஜாரவி யதார்த்த நடிப்பை கொடுத்து மனதில் பதிந்திருக்கிறார்.

தங்கதுரை, சாம் பால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

கல்விக்கொள்கையில் கொடிகட்டி பறக்கும்
தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மதிமாறன்.

இன்று சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கல்விக் கொள்ளை முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குனர் மதி மாறனுக்கு பாராட்டுகள்.

போலியான பெற்றோர்கள் வைத்து நடத்தும் காட்சி நல்ல திரைப்படத்திற்கு திருப்பமாக அமைந்திருக்கிறது.

கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் மதிமாறன்

ஜி.வி.பிரகாஷ்குமாரின்
பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரிய பலம்.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது.

ஒளிப்பதிவு காட்சிகளைப் பதிய வைக்கிறது.

தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் அறிமுக இயக்குனர் மதிமாறன்.

மொத்தத்தில் ‘செல்ஃபி’ திரைப்படம் கல்வி மாஃபியா கல்விக் கொள்கையை தோலுரித்துக் காட்டியிருக்கும் திரைப்படம்.