சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய நடிகர் சூர்யா!!
சென்னை 26 ஏப்ரல் 2022 சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய நடிகர் சூர்யா!!
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் கரங்கள்’ என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன.
மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள்.
இந்த வாகனம் இவர்களுக்கான உணவு வழங்குவதற்கு பயன்படும்.
இந்த வாகனத்தை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால், டாக்டர் திருமதி சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி வரும் நடிகர் சூர்யாவின் சேவை, வீதியோர மற்றும் வீடற்ற மக்களுக்காக தொண்டாற்றி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றி வருவதற்கு சமூகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனதார பாராட்டி பாராட்டுகிறார்கள்.
Related posts:
பிரபல இளம் நடிகர் மீது பண மோசடி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ?*
நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
நடிகர் தம்பி ராமையா மற்றும் மகன் உமாபதி மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடுக்கு பெருந்தொகையை வழங்கிய நடிகர் சூர்யா அவர்களுக்கு நன்றி
ஆண்டுதோறும் நடிகர் திலகம் பிறந்தநாளில் 108 பெண்களுக்கு அரை சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் அன்னை இல்லம் அறிவிப்பு!!
சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி
களவாணி 2′ பட விவகாரம் – கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வெல்வோம்” குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் !
இசைக்கருவிகள் மற்றும் இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

