சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி

தரமணி’ புகழ் நடிகர் வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது :இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம்.

நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன். இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாருக்கிறார்கள்.

ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன்.

இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.

நடிகர் வசந்த் ரவி, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சென்னை மக்களின் நலனுக்காக உழைக்கும் அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை (கையுறைகள், முகமூடிகள் மற்றும் துப்புரவாளர்கள்) வழங்கினார்.

மேலும், கோவை மாவட்டம் தரமணி வசந்த் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பாக மே மாதம் 3 ஆம் தேதி வரை இடிகரை பகுதி அனைத்து வீடுகளுக்கும் மதிய சாப்பாடு தர ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக திரு.வசந்த் ரவி அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கோவை மாவட்ட தரமணி வசந்த ரவி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தார்கள்.

‘தரமணி’ படத்திற்குப் பிறகு ‘ராக்கி’ படத்தில் நடிக்கிறார் வசந்த் ரவி. இப்படம் வெளியாவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.