பயணிகள் கவனிக்கவும் ரேட்டிங் :- 3.5/5

நடிகர் நடிகைகள் :- விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா, மாசும் ஷங்கர், பிரேம் குமார், RJ சரித்திரன், RS சிவாஜி, கவிதாலயா கிருஷ்ணன், மூனார் ரமேஷ், ராமச்சந்திரன், ஸ்டெல்லா ராஜ், ரேகா நாயர், நிகிலா ஷங்கர், சௌமியா, செல்வம், கார்த்திக் ராஜா, அனிஷா மற்றும் பலர்.

இயக்கம் :- S.P. சக்திவேல்.

ஒளிப்பதிவு :- S. பாண்டிக்குமார்.

படத்தொகுப்பு :- R.S. சதிஷ் குமார்.

இசை :- ஷமந்த் நாக்.

தயாரிப்பு :- ஆல் இன் பிக்சர்ஸ்.

ரேட்டிங் :- 3.5/5

கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த விக்ருதி திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

மலையாளம் திரைப்பட உலகில் 2019ஆம் ஆண்டு வெளியான விக்ருதி திரைப்படத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு
விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் ஒரிஜினல் வெளியாக உள்ளது.

சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கு வரும் தகவல்களை அதன் உண்மை என்னவென்று தெரியாமல் அதை பற்றி ஆராயாமல் அதை பலருக்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வரும் வழக்கம் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக பல அப்பாவி மனிதர்கள் சிலர் கொலை செய்யப்பட்டும், சிலர் தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் தவறான தகவலினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பம் பற்றி பேசும் திரைப்படம் தான் இந்த “பயணிகள் கவனிக்கவும்”.

சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர்.

கதாநாயகன் விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளனர்.

கதாநாயகன் விதார்த் மெட்ரோ ரயிலில் அசதியில் தூங்குவதை கருணாகரன் குடிபோதையில் தூங்குகிறார் என்று தவறுதலாக போட்டோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட அந்த போட்டோ வைரல் ஆகி விடுகிறது.

இதனால் வலைதளத்தில் பதிவிட்ட போட்டோ வால் கதாநாயகன் விதார்த்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது? கதாநாயகன் விதார்த் அதை எப்படி சமாளித்தார்? என்பதுதான் இநத பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடித்திருக்கிறார்.

மாற்று திறனாளியாக காது கேளாதவர்களும் வாய் பேச முடியாதவராகவும் மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்கு கதாநாயகன் விதார்த்திற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

Read Also  பிரண்ட்ஷிப் திரை விமர்சனம்.ரேட்டிங் – 2.5 /5

வாய் பேச முடியாமல் செய்கையால் ஒவ்வொரு விசயத்தையும் கூறும் விதத்தில் கதாநாயகன் விதார்த் அசத்துகிறார்.

முக்கியமான எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகம் இவரை போன்ற நல்ல நடிகர்களை சரியான கதாபாத்திரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

கதாநாயகன் விதார்த்தின் மனைவியாக லக்ஷ்மி பிரியாவும்
வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார்.

அவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவு செய்து லைக்ஸ்காக ஏங்கும் இன்றைய சமூகத்தில் உள்ள பலரது முகத்தை ஒற்றை உருவமாக கருணாகரன் வருகிறார்.

அவரது எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது

கருணாகரனின் நண்பராக வரும் சத்யன் சிரிக்க வைக்கிறார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் திரைப் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

பாண்டி குமாரின் ஒளிப்பதிவு ஓகே ராஜா.

ஷமந்த் நாக் பின்னணி இசை திரைப் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

R.S. சதிஷ் குமார் படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு செய்துள்ளார்.

பொது வெளியில் யாரென்றே தெரியாத ஒருவரின் சிறு செயல்களை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணர்ச்சி பூர்வமாக இந்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் உணர்த்துகிறது.

சாதாரண பதிவிடும் கடந்து விடும் நாம் அதன் பின் உள்ள உண்மை சூழ்நிலையை கண்டு கொள்வதில்லை.

செல்போன் கண்டு பிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்

இதனை அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று இயக்குனர் சக்திவேல் முடிவு செய்து இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

மிகவும் பொறுமையாகவே நகரும் திரைக்கதை நம் பொறுமையை சோதித்தாலும் திரைப்படம் சொல்ல வரும் மெசேஜ் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.

மொத்தத்தில் பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் தனி கவனத்தை பெறுகிறது.