இயக்குனர் சுந்தர் சி நடிகர் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!
சென்னை 12 மே 2022 இயக்குனர் சுந்தர் சி , நடிகர் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!சண்டைப்பயிற்சி ராஜசேகர், திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முகுந்தன் ராமன் பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் சிவம் இந்த பாடலை பாடியுள்ளார் .
பாடல் வரிகள் :
Verse 1:
இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க…
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட…
ருசிச்சு பாத்த நாக்கு இன்னும் கேக்க…
பயந்து திக்கு திக்கு சத்தம் கேக்க…
சுருட்டுக்குள்ள உள்ள பொடிய போல
கெடச்ச ஆளடிச்சு சிறுக, சிறுக
நெறிச்சு பத்த வச்சு பொகய விட்டு
ரசிச்சு பாத்திருப்பான் கதற விட்டு…
Chorus:
பட்டாம்பூச்சி…
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி…
பட்டாம்பூச்சி…
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி…
பட்டாம்பூச்சி…
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி…
Verse 2:
முரட்டு மாட்ட நின்னு ஓட விட்டு…
வெரட்டி கட்டி வெக்கும் சல்லிகட்டு…
புடிக்கும் வீரனுக்கு ரத்தமெல்லாம்…
பதக்கமாகி தொங்கும் நாளிருக்கு…
தனிச்சி நின்ன காட்டு யான ஒன்ன…
வெலங்கு போட்டு உள்ள கட்டி வெக்க…
தெரிஞ்ச ஆளு இங்க வந்திருக்கு…
குறுக்க பாற போல நின்னிருக்கு…
Chorus:
பட்டாம்பூச்சி…
இவன் காரசார காவக்காரன்…
பட்டாம்பூச்சி…
உன் ஆதி அந்தம் பாத்த வீரன்…
பட்டாம்பூச்சி…
நீ மோதி பாத்து பாதி ஆவ
பட்டாம்பூச்சி…
Bridge:
தான் சொல்லி வச்சு
கொன்னதெல்லாம்
கெத்தாகி போதையாக…
காட்டாறுக்குள்ள பூனை என்ன
யானைக்கும் பேதமில்ல…
சிறகுல சிறை இல்ல
பறவ போகும் காத்துல
பறவைக்கு குறியெல்லாம்
தரையிலுள்ள இரையில
பசிக்குற பொழுதுல
மாட்டியாகும் வலையில…
ஓஹோஹோ…
Chorus:
பட்டாம்பூச்சி…
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி…
பட்டாம்பூச்சி…
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி…
பட்டாம்பூச்சி…
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி…
நடிகர்கள் – சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் – பத்ரி
தயாரிப்பு – அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர்
ஒளிப்பதிவு -கிருஷ்ணசுவாமி ,
இசை -நவநீத் சுந்தர்,
எடிட்டிங் – பென்னிஆலிவர் ,
சண்டைப்பயிற்சி ராஜசேகர்,
திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
Related posts:
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’.!
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !
நடிகர் ஆர்யா- இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.
இசை நிறுவனம் தொடங்கியுள்ள சுந்தர் சி-19 தயாரிப்பாளர், சாதனா சர்கம் பாடிய முதல் பாடல் வெளியீடு.
“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C
இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்ட வெள்ளையானை பட பாடல் !
நடிகர் சசிகுமார் நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியீடு.
இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தின் அனைத்து உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது.
இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்! 1M- 1மில்லியன் தாண்டியது.

