நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

சென்னை 13 மே 2022 நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

சிவகங்கை மாவட்ட மக்களின் வசதிக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் ‘தாஸ் அறக்கட்டளை’ மூலம் குறிப்பிடத்தகுந்த சமூக சேவை செய்வதை வழக்கமாக செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேன்.

தமிழ் திரைப்பட உலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்போது அவர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை வளர்த்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.

மேலும் பேரிடர் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நன்கொடைகளை வழங்கி வருகிறார்.

இத்துடன் தனது சொந்த செலவில் சில ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்தும் வருகிறார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்த விழாவில் இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது சுமார் 21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.