மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த முக்கிய படங்களில் ஒன்றான மாமனிதன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் !!
சென்னை 13 ஜூலை 2022 மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த முக்கிய படங்களில் ஒன்றான மாமனிதன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் !!
சீனுராமசாமி இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் மாமனிதன் திரைப்படம் விஜய்சேதுபதி நடித்த முக்கிய படங்களில் ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பது படத்தின் ஒன்லைனாக இருக்கிறது.
மாமனிதன் திரைப்படம் aha ஓடிடி தளத்தில் ஜூலை 15 வெளிவருவது ஒட்டி சென்னை தாகூர் பிலிம் சென்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இதில் அரசியல் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.பத்ரி,இராஜசேகரன் ( மார்க்சிஸ்ட்) காங்கிரஸ் கட்சி சார்பாக எஸ்.திருநாவுக்கரசர், இதயதுல்லா,மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா,அப்துல்சமத்,பிரபல பத்திரி்கையாளர் விஜயசங்கர்,தமிழ்வேள்வி சதுரர் சத்தியவேல்முருகனார்,திரைக் கலைஞர்கள் விமல்,கலா,இயக்குநர்கள் பிருந்தாசாரதி,மணிபாரதி,தமயந்தி,தமிழக மக்கள் ஒற்றுமை மேடை க.உதயகுமார்,லயோலா திருச்சபை தந்தை,ஜான் , காட்சியியல் ஊடகத்துறை பேராசிரியர் சித்ரா,சமரசம் இதழாசிரியர் சிக்கந்தர் கவிஞர்கள் அய்யப்பமாதவன்,ரத்திகா மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோ என பங்கேற்று அவரவர் பார்வையில் ஆகா ஓடிடி வெளியீட்டிற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நிகழ்வை எழுத்தாளர் இரா.தெ.முத்து ஒருங் கிணைப்பு செய்திருந்தார்.











