நேரடியாக ஓடிடி வெளியாகும் சந்தானம் திரைப்படம்.

சென்னை 27 ஜூன் 2021

நேரடியாக ஓடிடி வெளியாகும் சந்தானம் திரைப்படம்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ஒன்று அடுத்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான திரைப்படங்கள் கைவசம் உள்ளன.

இதில் சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சபாபதி’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த சபாபதி திரைப்படத்திற்கு
சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்..

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.