‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் – இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு பாராட்டு!!!

சென்னை 02 ஆகஸ்ட் 2022  இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் – இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு பாராட்டு!!!

01.08.2022: லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நேற்று மாலை 6 மணி அளவில் மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார்.

 

திரைப்படத்தைப் பார்த்ததும் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, “இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில்
அற்புதம் !” என்று பாராட்டி , பார்த்திபனையும்
படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.

தமிழக முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய அரசியல் வரலாறு – 2022 ” எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம்
வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள
திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்…
இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்!