அன்புச்செழியன், மற்றும் தாணு ஞானவேல்ராஜா எஸ் .ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் ஐடி ரெய்டு!

சென்னை 02 ஆகஸ்ட் 2022 அன்புச்செழியன், மற்றும் தாணு ஞானவேல்ராஜா எஸ் .ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் ஐடி ரெய்டு!

நேற்று 02 ஆகஸ்ட் 2022 அதிகாலை முதல் கோபுரம் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பிரபல திரைப்பட பைனான்சியருமான அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

மேலும் பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், லட்சுமண குமார், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல தயாரிப்பாளர்கள் பெயர்களும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.