அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை வீட்டில் நலமுடன் இருக்கிறார் வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் நடிகை தீபா வெங்கட் தாயார் கூறினார்.
சென்னை 31 மே 2021
அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை வீட்டில் நலமுடன் இருக்கிறார் வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் நடிகை தீபா வெங்கட் தாயார் கூறினார்.
தமிழ் திரைப்பட உலகில் நடிகையாகவும் தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார்.
இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார்.
மேலும், பின்னணிக் குரல் கொடுத்ததற்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும், ஏராளமான சீரியல்களில் முதன்மை வேடத்திலும் நடித்தவர் நடிகை தீபா வெங்கட்.
இவர் ஒரு டப்பிங் கலைஞர் கூட சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இவர் தீபா வெங்கட் உயிரிழந்து விட்டதாக செய்தி வந்தன.
இன்று காலை முதலே சமூகவலைதளங்களில் செய்திகள் றெக்க கட்டி பறந்து வருகிறது.
ஆனால் இந்த செய்தி உண்மையல்ல.
இதுகுறித்து நடிகை தீபா வெங்கட்டின் தாயார் பத்மா வெங்கட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛என் மகள் கொரோனா தடுப்பூசி
போட்டுக் கொண்டது உண்மைதான்.
எனது மகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை வீட்டில் நலமுடன் இருக்கிறார்.
அவர் தான் வீட்டில் எல்லா வேலைகளும் செய்கிறார்.
யார் இதுபோன்று செய்திகளை பரப்பி விட்டார்கள் என தெரியவில்லை.
காலை முதலே நிறைய போன் கால்கள் வந்த வண்ணமாக உள்ளது.
தயவு செய்து இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்” என்றார்.