ஆறாம் நிலம் திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5.

நடிகர் நடிகைகள் – நவயுகா குகராஜா, ஜீவேஸ்வரன் அன்பரசி , மன்மதன் பாஸ்கி
மற்றும் பலர்.
தயாரிப்பு – IBC தமிழ்
இயக்கம் – அனந்த ரமணன்
ஒளிப்பதிவு – சிவ சாந்தகுமார்.
படத்தொகுப்பு – சஜீத் ஜெயக்குமார்.
இசை – சிந்தகா ஜெயக்கொடி.
ஐபிசி தமிழ் யூடியூப் சேனல்.
திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021
ரேட்டிங் –3 /5
ஈழத் தமிழர்களின் அவலத்தை சொல்லும் திரைப்படத்தை
ஐபிசி தமிழ் ஊடகத்தின் தயாரிப்பில் இயக்குநர் அனந்த ரமணன் இயக்கியிருக்கும் முழு நீள ஈழத் தமிழ் திரைப்படமான ‘ஆறாம் நிலம்’,
இலங்கை மண்ணில் இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதம் இனப் படுகொலை செய்த 2008 2009 முள்ளிவாய்கல் யுத்தம் இறுதிப் போர் நடைபெற்றது.
இலங்கையில் தற்போது வசித்துவரும் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான துயரங்களையும் என்றைக்கும் ஆறாத ரணங்களின் மீது குத்திப் பார்க்கும் தற்காலச் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழரின் பிணக் குவியலுக்கு நடுவே குண்டு மழைக்கு தப்பித்த தமிழர்கள் ஆயிரக் கணக்கில் சிங்கள இராணுவத்தினரிடம் மண்டியிட்டு சரணடைந்தனர்.
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வந்தாரா வரவில்லையா?
என்பதுதான் ஆறாம் நிலம் திரைப்படத்தின் மீதி கதை
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை ஏழு வருடங்களாக தேடும் கதாநாயகியாக நடித்திருக்கும் நவயுகா குகராஜா வாழ்ந்திருக்கிறார்.
அப்பா எப்போது வருவார் என்ற கேள்வியுடன் ஏழு வருடங்களாக காத்திருக்கும் மகளாக ஜீவேஸ்வரன் அன்பரசி.
ஜீவேஸ்வரன் அன்பரசி நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது
முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றது. ஏனைய பாத்திரங்களும் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் வலியை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு ஈழத்தமிழர்களை பல்வேறு வசதிகளோடு நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு கூறினார்கள்.
ஆனால் சிங்கள அரசு கொடுத்த வேலை என்னவென்றால் போரில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை.
தமிழர்களைக் கொண்டே தந்திரமாக கன்னிவெடிகளை அகற்றும் வேலையைச் செய்யும் சிங்கள் ஆரசாங்கத்தின் என்.ஜி.ஓ வேலைக்குச் செல்கிறார் கதாநாயகி நவயுகா குக ராஜா.
அந்தப் பணியில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் காத்திருக்கும் கன்னிவெடி வாழ்க்கையையும் முடித்துவிடும் என்கிற சூழ்நிலையில் கதாநாயகி நவயுகாவையும் அவர்களைப்போன்ற குடும்பங்களை சுற்றியிருக்கும் மனிதர்களின் அவலத்தையும் பளிச்சென்று வெளிக் காட்டி இருக்கிறார்கள்.
நடிகர் நடிகைகள் அனைவரும் ஈழத்தமிழர்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
அப்போ நம்மளக் காப்பாத்திக்கொள்றதுக்காக கன்னிவெடிகளை புதைச்சோம்.
இப்ப அதை எடுக்கிறோம்.
“இரண்டுமே நம்ம நிலத்துக்காகத்தான் செய்யரோம்” எனும் போது ஈழத்தமிழர் பறிகொடுத்த நிலமும் பசித்திருக்கும் அவர்களின் வயிறும் இன்றைய நிதர்சனம் என்பதை உரைக்கின்றன.
கன்னிவெடிகளை தேடும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார்.
பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.
பாராட்டி ஆதரிக்க வேண்டிய இந்த முயற்சியை ஐபிசி தமிழ் ஊடகத்தின் யூடியூப் அலைவரிசையில் வரும் 24- ஆம் திகதிமுதல் கண்டு கண்ணீர் சிந்தலாம்.
மொத்தத்தில் ஆறாம் நிலம் திரைப்படம் ஒரு கண்ணீர் நிலம்.
ஆறாம் நிலம் திரைப்படத்தின் லிங்க்;











