CLEF MUSIC AWARDS 2024 ஆறு விருதுகளை வென்ற ரயில் படத்தின் இசையமைப்பாளர், பன்முக இசைக்கலைஞர் எஸ்.ஜே. ஜனனி !!

CLEF MUSIC AWARDS 2024 ஆறு விருதுகளை வென்ற ரயில் படத்தின் இசையமைப்பாளர், பன்முக இசைக்கலைஞர் எஸ்.ஜே. ஜனனி !!

சென்னை 01 அக்டோபர் 2024 சமீபத்தில் வெளியான ரயில் படத்தின் இசையமைப்பாளர் S. J. ஜனனி, ரயில் திரைப்படப் பாடல்களுக்காக 4 பிரிவுகளில் 4 CLEF இசை விருதுகள் மற்றும் மும்பை 2024 மற்றும் பக்திப் பிரிவுகளுக்கான 2 விருதுகளை வென்றுள்ளார்.

இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் திரு.  வேடியப்பன் தயாரித்தார் மற்றும் திரு. பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார்.

விருது விவரங்கள்

Radio & Music 5 CLEF MUSIC AWARDS 2024-இன் 4வது பதிப்பு, செப்டம்பர் 27, 2024 அன்று லீலா ஹோட்டல், இன்டர்நேஷனல் ஏர்போர்ட், மும்பையில் நடைபெற்றது.

இந்திய சினிமா பிரிவில் எஸ்.ஜே.ஜனனிக்கு RAIL திரைப்படத்திற்காக 4 விருதுகள் வழங்கப்பட்டன: சிறந்த இசையமைப்பாளர் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக), சிறந்த பெண் பின்னணிப் பாடகி, ஏலே செவத்தவனே… (“ரயில்” படத்தில் இருந்து), சிறந்த திரைப்படப் பாடல் -தமிழ் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக), & எது உன் இடம் (“ரயில்” என்ற பாடலுக்காக சிறந்த இசை கோர்ப்பாளர் மற்றும் ப்ரோகிராமர்).

இத்துடன், ஜனனியின் “சிவனே சிவனே ஓம்” பிரம்மகுமாரிகளின் பாடல், 2024 ஆம் ஆண்டுக்கான 2 CLEF இசை விருதுகளை வென்றது:

பக்தி – சிறந்த இசையமைப்பாளர் & பக்தி-சிறந்த பாடல்/ஆல்பம் தமிழ், “இந்திய தேசிய விருது”, தமிழக அரசின் “கலை மாமணி விருது” & பல உலகளாவிய விருதுகள் பெற்ற எஸ்.ஜே. ஜனனி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச பாடகர்- பாடலாசிரியர்கள் சங்கத்தின் 2024 ஆகஸ்ட் ஆண்டின் சர்வதேச பெண் பாடகருக்கான ISSA விருதை வென்றுள்ளார்.

இவர் கிராமி வாக்களிக்கும் உறுப்பினர்  என்பது குறிப்பிடத் தக்கது.