சித்தா மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது !!
சித்தா மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது !!
சென்னை 05 ஆகஸ்ட் 2024 நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த திரைப்படம் ‘சித்தா’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ திரைப்படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார்.
திரைப்படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணனும், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் அமைத்திருந்தனர்.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை பின்னணியாகக் கொண்டு திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
ஜந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சித்தா திரைப்படம் ஏழூ ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளியுள்ளது.
சிறந்த திரைப்படம், சித்தா.
சிறந்த இயக்குநர், அருண்குமார்.
சிறந்த நடிகர்-சித்தார்த் (விமர்சகர்கள் விருது), சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய ஏழு பிரிவுகளில் இந்த திரைப்படத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
இதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காக சியான் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
இதுதவிர, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை வடிவமைப்பாளர் ஆகிய பிரிவுகளிலும் இந்த திரைப்படம் விருதினை தட்டிச்சென்றுள்ளது.
மேலும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த ஃபஹத் பாசில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
அதேசமயம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.











