நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- நயன்தாரா, விக்னேஷ் சிவன், நாகார்ஜுனா அக்கினேனி, ராதிகா சரத்குமார்,
ராணா டகுபதி, டாப்ஸி பண்ணு, தமன்னா, ஆட்லி, நெல்சன் திலிப் குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒளிப்பதிவாளர் :- சரண்யா சந்தர்.

படத்தொகுப்பாளர் :- கிருத்திக் போர்வால்.

இசையமைப்பாளர் :- பேலோன் பொன்சேகா

தயாரிப்பு நிறுவனம் :- ரெளடி பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ரேட்டிங் :- 2.5./5.

இந்தியா திரைப்பட உலகில் புகழ்பெற்ற லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் நடிகை நயன்தாராவை பற்றி பேசுகிறது இந்த நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) என்கின்ற ஆவணப்படம்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சிறுவயது உருவத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதோடு தொடங்கும் இந்த ஆவணப்படம், ‘மனசின்னகரே’ தினரைப்படத்தில் தொடங்கி ‘ஜவான்’ வரையிலான நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை மேலோட்டமாக தொட்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையில் நடிக்க வந்தது முதல் நடிகை நயன்தாராவின் பயணம் ஏறுமுகமாகதான் இருந்திருக்கிறது.

தன்னுடைய முதல் ஆறு திரைப்படங்களில் ஜெயராம், சரத்குமார், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த் ஆகியோருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா திரைப்பட துறையில் நடிகையாக அறிமுகமானது முதல் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்து பலவிதமான தடைகளுக்குப் தாண்டி முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – விசித்திரக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம்

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் என்ற உடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது காதல் கதைகளை தான், ஆனால் இதில் அவர் தான் கடந்து வந்த காதல்கள் பற்றி மேலோட்டமாக மட்டுமே பேசியிருப்பதோடு, காதல் விவகாரங்களில் பெண்களை மட்டுமே குற்றம் சொல்கிறார்கள், என்ற விசயத்தை மட்டும் மிகவும் அழுத்தமாக மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்..

தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான காலங்களில்தான் அவர் பல அவமானங்களை கடந்துதான் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறேன், என்பதை பதிவு செய்திருப்பவர், திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியது பற்றி எந்த தகவலையும் பகிர்ந்துக் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் மற்றும் திருமணத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க வியாபார மூக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நடிகை நயன்தாரா என்ற நடிகைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள் மற்றும் இதுவரை மக்களுக்கு தெரியாத தகவல்களை துளிகூட சொல்லாத இந்த ஆவணப்படம் நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அதையும் முழுமையாக விவாதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

நடிகை நயன்தாரா பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும், இதில் நடிகை நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் ஆவணப்படத்தை பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

நடிகை நயன்தாரா என்னிடம் முதல் முறையாக காதலை சொன்ன போது, அவரின் எத்தகைய மனநிலையில் இருந்தார், என்பதோடு, நடிகை நயன்தாரா உடன் அவருடைய காதல் விசயம் வெளியே தெரிந்தவுடன் வந்த முதல் மீம்ஸ் மற்றும் விமர்சனங்களை அவர் எடுத்துக்கொண்ட விதம், தற்போது அவர் மனைவி நயன்தாராவுக்கு ஏற்றபடி வாழ்வது, போன்றவற்றை நகைச்சுவையாக விவரித்து கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ஒரு நடிகையின் ஆவணப்படத்தை ஒரு படைப்பாக அல்லாமல் நேர்காணல் போல் இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில், ’நயன்தாரா- பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், நடிகை நயன்தாராவின் ரசிகர்களை ஏமாற்றாது என்பதுதான் உண்மை.