‘நினைவெல்லாம் நீயடா’ திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரஜன், மனிஷா யாதவ், சினமிகா, யுவலக்ஷ்மி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல். தேனப்பன் முத்துராமன், யாசர் அபி நட்சத்திரா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :– ஆதிராஜன்.

ஒளிப்பதிவாளர் :- ராஜா பட்டாச்சார்ஜி.

படத்தொகுப்பாளர் :- ஆஷிஷ்.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- லேகா தியேட்டர்ஸ்.

தயாரிப்பாளர் :- ராயல் பாபு.

 

புதிதாக வந்து பள்ளியில் சேரும் இளம் வயது கதாநாயகி யுவலட்சுமி மீது காதல் கொள்ளும் இளம் வயது கதாநாயகன் ரோஹித்  தன் காதலை அவளிடம் சொல்லத் தயங்கி பள்ளி முடியும் தருவாயில் தன் மனதில் உள்ள காதலை காதல் கடிதம் ஆக இளம் வயது கதாநாயகி யுவலட்சுமி இடம் தருகிறான்.

இளம் வயது கதாநாயகி யுவலட்சுமி வெளிநாட்டில் இருக்கும் தன் தந்தையின்  உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவரைக் பார்ப்பதற்கு உடனடியாக  வெளிநாடு புறப்பட்டு சென்று விடுகிறார்.

வெளிநாட்டில் இருக்கும் தன் தந்தையை பார்க்க சென்ற இளம் வயது கதாநாயகி யுவலட்சுமி மீண்டும் திரும்பாத நிலையில்  கதாநாயகன் பிரஜன் தனது சொந்த மாமன் மகள் கதாநாயகி மனிஷா யாதவ் திருமணம் செய்து கொள்ளும்படி தன் தாயார் மற்றும் குடும்பத்தார் வற்புறுத்தலால் அதை ஏற்று கதாநாயகி மனிஷா யாதவ் திருமணம் செய்து கொள்கிறார்.

வெளிநாடு சென்ற தனது முன்னாள் காதலி கதாநாயகி யுவலட்சுமி நினைத்து கொண்டிருக்க இருவருக்கும் மனதளவில் ஒற்றுமையாக இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பழைய காதலியை நினைத்து நினைத்து கதாநாயகன் பிரஜன் குடிக்கு அடிமையாகி விடுகிறார்.

கதாநாயகன் பிரஜனை பார்த்து அவரது மனைவி கதாநாயகி மனிஷா யாதவ் பைத்தியமாகி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்..

இந்த நிலையில் வெளிநாட்டுக்குச் சென்ற கதாநாயகி யுவலட்சுமி திருமணம் நடந்து இருக்கும் என்று நண்பர்கள் அனைவரும் கூறிய நிலையில் அவர் கதாநாயகன் பிரஜனுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார்

கதாநாயகி யுவலட்சுமி நிலையை கண்டு கதாநாயகன் பிரஜன் மனம் வாடுகிறார்.

எப்படியாவது கதாநாயகன் பிரஜனை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கதாநாயகி யுவலட்சுமி எண்ணுகிறார் ஆனால் இறுதியில் எதிர்பார்க்காத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஒன்று நடக்கிறது.

கதாநாயகன் பிரஜனை பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் கதாநாயகி யுவலட்சுமி இல்லை என தெரிய வர கதாநாயகன் பிரஜன் கதாநாயகி யுவலட்சுமி இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த நினைவெல்லாம் நீயடா திரைப்படத்தின் மீதி கதை

இந்த நினைவெல்லாம் நீயடா திரைப்படத்தில் கதாநாயகனாக பிரஜன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரஜின், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நூறு சதவீதம் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் பள்ளி பருவத்தில் பிரிந்த காதலிக்காக, ஏக்கத்தோடும், சோகத்தோடும் காத்திருக்கும் மனநிலையை தனது நடிப்பில் மட்டும் இன்றி முகத்திலும் தியைப்படம் முழுவதும் வெளிக்காட்டியிருப்பது கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருந்தாலும், திரைப்படம் பார்க்கும் திரைப்பட ரசிகர்களை வருத்தப்பட வைத்திருக்கிறார்.

கதாநாயகன் பிரஜினின் அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாநாயகி மனிஷா யாதவ், தனது மாமா கதாநாயகன் பிரஜின் மீது வெறித்தனமான காதலை நடிப்பு மூலம் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, முதிர் கண்ணியாக காட்சிகளில் தென்படுகிறார்.

இந்த முதிர் கண்ணிக்காகவா கதாநாயகன் பிரஜின் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார், என்று அவர் மீது நமக்கு மிகப்பெரிய அளவில் பரிதாபம் வருகிறது.

முதிர் கன்னியாக வரும் சினாமிகா ஒரு உண்மையை சொல்லி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஆறுதல் அளிக்கிறார்.

பள்ளி பருவத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ரோஹித் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் யுவலக்‌ஷ்மி இருவரும் திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் வரும் காட்சிகள் தான் காதல் காவியம் பார்த்தது போல் உணர்வை கொடுப்பதோடு, கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறது.

கதாநாயகன் பிரஜினின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி தனிமனிதராக சில இடங்களில் சிரிக்க வைத்து விட்டார்.

மனோபாலா, மதுமிதா, ஆர்.வி. உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், பிரதீப் தர்மராஜ், அபி நக்‌ஷத்ரா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் அருமையாக பயணித்திருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு கேட்கும்படி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி காதல் மென்மை குறையாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பளிச்சென்றும் காட்சிப்படுத்திருக்கிறார்.

நமது வாழ்க்கையில் முதல் முதலாக உதயமாகும் காதல் எப்பொழுதுமே நம் நினைவில் இருந்து அகலாது, என்பதை உணர்த்தும் வகையில் கதை எழுதி இருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.

வாழ்க்கையில் முதல் முதலாக உதயமாகும் முதல் காதல் அனைவருக்கும் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அப்படி இருந்தாலும் அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்ற கருத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

மொத்தத்தில், ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம் திகட்டாத காதல் ஓவியம்.

error: Content is protected !!