பர்த் மார்க் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பஷீர் கல்லாரக்கல், மிர்னா, பொற்குடி செந்தில், இந்திரஜித், தீப்தி, பி ஆர் வரலட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விக்ரம் ஸ்ரீதரன்.
ஒளிப்பதிவாளர் :- உதய் தங்கவேல்.
படத்தொகுப்பாளர் :- இனியவன் பாண்டியன்.
இசையமைப்பாளர் :- விஷால் சந்திரசேகர்.
தயாரிப்பு நிறுவனம் :- சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- விக்ரம் ஸ்ரீதரன் – ஸ்ரீராம் சிவராமன்.
கர்ப்பிணியான கதாநாயகி மிர்ணாவை கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் அழைத்துக் கொண்டு கேரளாவில் உள்ள இயற்கையாக குழந்தை பிறக்க வேண்டும் என இயற்கை வைத்தியசாலைக்கு அழைத்து செல்கிறார்.
இவர் ராணுவத்தில் போர் முனையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனதளவில் குழப்பத்தில் இருக்கிறார்.
இதனால் அடிக்கடி கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் மனதளவில் பல்வேறு சிந்தனைகள் வந்து செல்கிறது.
இயற்கை பிரசவத்திற்காக செல்லும் இயற்கை வைத்திய சாலையில் உள்ள காவலாளிடம் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் வாய் அடிக்கடி தகராறு ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறுகிறது.
இதற்கிடையில் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் கதாநாயகி மிர்ணா மீது அதிக அளவில் பாசம் காட்டும் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் கதாநாயகி மிர்ணா வயிற்றில் வளர்வது தன்னுடைய குழந்தை இல்லை என சந்தேகப்படுகிறார்.
தன்னுடைய குழந்தை இல்லை என கேட்ட கதாநாயகி மிர்ணா மனதளவில் அதிர்ச்சி அடைகிறார் .
உன் வயிற்றில் வளரும் இந்த குழந்தைக்கு பதிலாக நாம் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் கூற கதாநாயகி மிர்ணா பயந்து நடுங்குகிறார்.
எங்கே தனது வயிற்றில் வளர்ந்திருக்கும் குழந்தையை கொன்று விடுவாரோ என்ற பயத்தில் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் குடிசையில் வைத்து பூட்டிவிட்டு தீ மூட்டிவிட்டு தப்பி சென்று விடுகிறார்.
அங்கிருந்து தப்பும் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் கதாநாயகி மிர்ணாவை துரத்துகிறார்.
கதாநாயகி மிர்ணாவுக்கு தப்பித்து செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்படுகிறது.
அதே நேரத்தில் வலியால் துடித்து கீழே விழுந்து விடுகிறார் கதாநாயகி மிர்ணாவை கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் அவளைக் காப்பாற்றுகிறார்.
அடுத்து நடந்தது என்ன? கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் கதாநாயகி மிர்ணாவை என்ன செய்தார், கதாநாயகி மிர்ணாவுக்கு இயற்கை வைத்தியசாலையில் குழந்தை பிறந்ததா? குழந்தை பிறக்க வில்லையா? என்பதுதான் இந்த பரத் மார்க் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பரத் மார்க் திரைப்படத்தில் கதாநாயகனாக கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக பஷீர் கல்லாரக்கல் ஆர்மி இளைஞராகவும் அதே சமயம் சந்தேகப்படும் கணவனாகவும் இரு மாறுபட்ட உணர்வுகளை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் கதாநாயகன் பஷீர் கல்லாரக்கல் தாடி வைத்த முகம் சேவிங் செய்த முகம் என 2 தோற்றங்களில் அருமையாக இருக்கிறது.
இந்த பரத் மார்க் திரைப்படத்தில் கதாநாயகியாக மிர்ணா நடித்திருக்கிறார்.
கதாநாயகி மிர்ணா ஒரு கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக கதாநாயகி மிர்ணா பெண்ணின் வேதனைகளை தன் முகத்தில் நடிப்பில் மூலம் கொடுத்திருக்கிறார்.
கர்ப்பிணியாக வரும் கதாநாயகி மிர்ணாவை தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை கர்ப்பிணியாகவே வாழ்ந்து இருக்கிறார்.
வாய் பேச முடியாதவராக இந்திரஜீத் கதாபாத்திரத்தை அருமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இந்த பரத் மார்க் திரைப்படத்தில் நடித்திருக்கும் தீப்தி, பொற்கொடி, பிஆர்.வரலட்சுமி அனைவரும் கதை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல். ஒளிப்பதிவு அடர்ந்த காடு பகுதியில் அதன் உள்ளே வெள்ளை அடிக்கப்பட்ட அரங்கம் என சிறப்பாக காட்சி படுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் ஒளிப்பதிவு கண்ணாடி போல் பளபளகிறது.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை பாடல் பின்னணி இசை அனைத்தும் மிரட்டல்.
இயக்குனர் விக்ரம் ஶ்ரீதரன் இயக்கம் கொஞ்சம் கடினமான புரிதலை ஏற்படுத்துகிறது.
திரைப்படத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை ரிலாக்ஸ் என்பதற்கு இடம் எதுவும் இல்லாமல் நேர்கோட்டில் கதையை இயக்கிச் சென்று இருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஶ்ரீதரன்.
மொத்தத்தில் பர்த் மார்க் தமிழ் திரைப்பட உலகில் பெஞ்ச் மார்க்.











