முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் விஜயதசமி அன்று வெளி வருகிறது!!
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் விஜயதசமி அன்று வெளி வருகிறது!!‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த சீ கார்த்தீஸ்வரன் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஶ்ரீனிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன்,
ராதாகிருஷ்ணன், MR அர்ஜுன், மிருதுளா, ஜெயஶ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
சென்னை, மும்பை, காஷ்மீர், குளுமணாலி கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது..
ஶ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சித்ரா, நடிகர் ஜெய் மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
சஜின் C படத்தொகுப்பு செய்கிறார். NS ராஜேஷ்குமார் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணி புரிகின்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும்.
Related posts:
நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கும் “மியூசிக் ஸ்கூல்” திரைப்படம் 12 மே அன்று வெளி வருகிறது.!!
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் “கா” திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளி வருகிறது!!
நடிகர் வெற்றி நடிகை ஷிவானி நடிப்பில், “பம்பர்” திரைப்படம் ஜூலை 7ஆம் திரையரங்குகளில் வெளி வருகிறது.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 முதல் உலகமெங்கும் வெளி வருகிறது.!!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ’ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளி வருகிறது !
“ரத்னம்” திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது குஷியில் நடிகர் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!
அட்ரஸ் திரைப்படத்தில் புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் நடிகர் அதர்வா முரளி.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது!!!
தயாராகட்டும் டான்ஸ் ஃப்ளோர் , இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல், நவம்பர் 20 அன்று, வெளி வருகிறது !
தீபாவளி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசர் வெளி வருகிறது.

