புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேவி அறக்கட்டளை மூலம் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தார் நடிகர் விஷால்.!!

சென்னை 28 ஆகஸ்ட் 2022 புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேவி அறக்கட்டளை மூலம் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தார் நடிகர் விஷால்.!!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் நடிகர் விஷால் அவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பொதுவாக நடிகர் விஷால் அவர்கள் தனது நண்பர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிக்கத்தக்க பெரியோர்களின் பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தை நண்பர்களுக்கும் மதிக்கத்தக்க பெரியவர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம்.

அதேபோன்று புரட்சி கலைஞர் நடிகர் திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளிலும் பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது.

இச்செயல் அனைவரையும் வியப்படைய செய்தது மேலும் புரட்சி கலைஞர் திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

error: Content is protected !!