ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.

சென்னை 10 மே 2021

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் மற்றும் அரசியல் பிரபலங்கள் பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நடிகர் விஷால் இவர் தனது தாயாரின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பதால், தினமும் 500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

இந்த உணவு பொருட்களை தேவி அறக்கட்டளை சார்பில் நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல இடங்களில் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகிறார்.

அதுபோல், உணவின்றி தவித்து வரும் சாலையோர கால்நடைகளுக்கும் உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.