புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி சூப்பர் ஸ்டார் மற்றும் வடிவேலுவுடன் நடித்த பிரபல குணசித்திர நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்.

சென்னை 29 ஏப்ரல் 2022 புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி சூப்பர் ஸ்டார் மற்றும் வடிவேலுவுடன் நடித்த பிரபல குணசித்திர நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

தமிழ் திரைப்பட உலகில் 500க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி.

இவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் நடிகை ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பது இவர்தானாம்.

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப் படத்தில் வடிவேலு உடன் பாட்டியாக நடித்திருந்தார்.

இவர் கடந்த சில வருடங்களாக திரைப்படத் துறையில் வாய்ப்பில்லாமல் வறுமையில் இருந்துள்ளார்.

எனவே வறுமை இவரே வாட்டவே சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு விற்று வந்துள்ளார்.

தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்போது சில நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் உதவி செய்தனர்.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாகவும் வறுமை காரணமாகவும் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப் பாளையத்துக்கு சென்று விட்டார்.

அங்குதான் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முன் உடல் நலமில்லாமல் இருந்த நடிகை ரங்கம்மா பாட்டி
இன்று மதியம் காலமானார்.