சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!
சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!
சென்னை 06 ஜூலை 2025 சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது.
ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி.
ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை புரிந்து, தமிழ் சினிமாவின் வரலாற்றில் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையான படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இது ரஜினியின் உலகளாவிய பிரபலத்தையும், லோகேஷின் மாஸ் இயக்கமும், சன் பிக்சர்ஸின் ப்ரொடக்ஷன் வெல்யூவும் சேர்ந்து உருவாக்கிய மாபெரும் வரவேற்பைக் காட்டுகிறது.
சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை ஆதரிக்கிறது.
உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும்.
கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது.
கூலி என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல ஒரு சகாப்தமாக உருவாகி வருகிறது.
இது ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் இந்திய சினிமா ரசிகர்களுக்கான உலகளாவிய கொண்டாட்டமாக இருக்க போகிறது .
Related posts:
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” !!
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !!
சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்.!
38 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் !!
நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை படைக்கும் ‘சாஹோ
ஜவான் திரைப்படம் வெளியான 11 நாட்களில் 850 கோடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது!
நடிகர் சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது !
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!
இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ !
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளி வந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம் வசூலில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது!!

