இன்றைய ராசிபலன்கள் 19/10/2024

இன்றைய ராசிபலன்கள்.

19-10-2024 சனிக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

19-10-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 2
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை – Oct 18 01:15 PM – Oct 19 09:49 AM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Oct 19 09:49 AM – Oct 20 06:46 AM

நட்சத்திரம்

பரணி – Oct 18 01:26 PM – Oct 19 10:46 AM

கார்த்திகை – Oct 19 10:46 AM – Oct 20 08:31 AM

கரணம்

கரசை – Oct 18 11:30 PM – Oct 19 09:49 AM

வனசை – Oct 19 09:49 AM – Oct 19 08:14 PM

பத்திரை – Oct 19 08:14 PM – Oct 20 06:46 AM

யோகம்

ஸித்தி – Oct 18 09:34 PM – Oct 19 05:41 PM

வ்யதீபாதம் – Oct 19 05:41 PM – Oct 20 02:11 PM

வாரம்

சனிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:10 AM
சூரியஸ்தமம் – 5:58 PM

சந்திரௌதயம் – Oct 19 7:44 PM
சந்திராஸ்தமனம் – Oct 20 8:44 AM

அசுபமான காலம்

இராகு – 9:07 AM – 10:36 AM
எமகண்டம் – 1:33 PM – 3:01 PM
குளிகை – 6:10 AM – 7:39 AM

துரமுஹுர்த்தம் – 07:45 AM – 08:32 AM

தியாஜ்யம் – 09:38 PM – 11:05 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:41 AM – 12:28 PM

அமிர்த காலம் – 06:30 AM – 07:55 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

துர்வாஞ்சம் Upto – 10:46 AM
துவஜ

வாரசூலை

சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

சனிக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

19-10-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். விற்பனை துறையில் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்சொல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : மதிப்பளித்துச் செயல்படவும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரிஷபம்

வியாபாரப் பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை ஏற்படும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

கடகம்

கால்நடை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அரசு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெண்மை நிறம்

புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூசம் : இலக்குகள் பிறக்கும்.
ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு ஏற்படும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : ஆதரவு ஏற்படும்.
உத்திரம் : தீர்வுகள் கிடைக்கும்.

கன்னி

புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : புரிதல் மேம்படும்.
அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை தர வேண்டாம். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அறிமுகங்கள் கிடைக்கும்.
சுவாதி : குழப்பமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

விருச்சிகம்

உத்தியோக முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளில் விவேகத்துடன் செயல்படவும். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : ஆர்வம் மேம்படும்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

தனுசு

சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கோபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : புரிதல் பிறக்கும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

மகரம்

பாகப் பிரிவினை விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெருமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கும்பம்

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாகன பயணங்களின் மூலம் அனுபவமும், ஆதாயமும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலையாட்களை அரவணைத்துச் செல்லவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். கடன்களை அடைப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் T.MUNIRAJAN
+919942285750