இன்றைய ராசிபலன்கள் 05/09/2024 .

இன்றைய ராசிபலன்கள்.

05-09-2024 வியாழன் கிழமை
தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஆவணி 20
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி.

சுக்ல பக்ஷ துவிதியை – Sep 04 09:47 AM – Sep 05 12:21 PM

சுக்ல பக்ஷ திருதியை – Sep 05 12:21 PM – Sep 06 03:01 PM

நட்சத்திரம்

அஸ்தம் – Sep 05 06:14 AM – Sep 06 09:25 AM

கரணம்

கௌலவம் – Sep 04 11:03 PM – Sep 05 12:21 PM

சைதுளை – Sep 05 12:21 PM – Sep 06 01:41 AM

கரசை – Sep 06 01:41 AM – Sep 06 03:01 PM

யோகம்

சுபம் – Sep 04 08:02 PM – Sep 05 09:07 PM

சுப்ரம் – Sep 05 09:07 PM – Sep 06 10:14 PM

வாரம்
வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 6:22 PM

சந்திரௌதயம் – Sep 05 7:40 AM
சந்திராஸ்தமனம் – Sep 05 7:55 PM

அசுபமான காலம்

இராகு – 1:49 PM – 3:20 PM
எமகண்டம் – 6:14 AM – 7:45 AM
குளிகை – 9:16 AM – 10:47 AM

துரமுஹுர்த்தம் – 10:17 AM – 11:05 AM, 03:08 PM – 03:56 PM

தியாஜ்யம் – 03:45 PM – 05:34 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:54 AM – 12:42 PM

அமிர்த காலம் – 02:36 AM – 04:25 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM

ஆனந்ததி யோகம்

ராக்ஷசம்

வாரசூலை

சூலம் – South
பரிகாரம் – தைலம்

வியாழன் கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

05-09-2024) ராசி பலன்கள்

மேஷம்

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த இன்னல்கள் விலகும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலை ஏற்படும். சொத்து விஷயங்களில் லாபம் மேம்படும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : தெளிவுகள் பிறக்கும்.
கிருத்திகை : லாபங்கள் மேம்படும்.

ரிஷபம்

நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். புரிதல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : மாற்றங்கள் பிறக்கும்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கடகம்

எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூசம் : ஆர்வம் மேம்படும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : நம்பிக்கைகள் மேம்படும்.

கன்னி

ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் சில மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழில் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெளிவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். வியாபார ரீதியாக நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : திருப்பங்கள் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : சஞ்சலங்கள் நீங்கும்.

விருச்சிகம்

முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : உதவிகள் சாதகமாகும்.

தனுசு

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனை ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் பிறக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூராடம் : மதிப்புகள் மேம்படும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்களில் புரிதல் மேம்படும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.

கும்பம்

தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

அவிட்டம் : பயணம் மேம்படும்.
சதயம் : நம்பிக்கையை மேம்படுத்தும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : சுப விரயங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : லாபம் உண்டாகும்.

error: Content is protected !!