இன்றைய ராசிபலன்கள் 07/11/2024.

இன்றைய ராசிபலன்கள் 

07-11-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

07-11-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 21

நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சஷ்டி – Nov 07 12:41 AM – Nov 08 12:35 AM

சுக்ல பக்ஷ சப்தமி – Nov 08 12:35 AM – Nov 08 11:56 PM

நட்சத்திரம்

பூராடம் – Nov 06 11:00 AM – Nov 07 11:47 AM

உத்திராடம் – Nov 07 11:47 AM – Nov 08 12:03 PM

கரணம்

கௌலவம் – Nov 07 12:41 AM – Nov 07 12:42 PM

சைதுளை – Nov 07 12:42 PM – Nov 08 12:35 AM

கரசை – Nov 08 12:35 AM – Nov 08 12:20 PM

யோகம்

த்ருதி – Nov 06 10:50 AM – Nov 07 09:51 AM

சூலம் – Nov 07 09:51 AM – Nov 08 08:27 AM

வாரம்

வியாழக்கிழமைசூ ரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 5:53 PM

சந்திரௌதயம் – Nov 07 11:00 AM
சந்திராஸ்தமனம் – Nov 07 10:54 PM

அசுபமான காலம்

இராகு – 1:31 PM – 2:58 PM
எமகண்டம் – 6:13 AM – 7:40 AM
குளிகை – 9:08 AM – 10:35 AM

துரமுஹுர்த்தம் – 10:06 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM

தியாஜ்யம் – 07:52 PM – 09:29 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:40 AM – 12:26 PM

அமிர்த காலம் – 06:48 AM – 08:27 AM, 05:34 AM – 07:11 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

பிரபாபதி Upto – 11:47 AM
சௌமியம்

வாரசூலை

சூலம் – South
பரிகாரம் – தைலம்

சூர்யா ராசி

சூரியன் துலாம் ராசியில்

சந்திர ராசி

நவம்பர் 07, 05:54 PM வரை தனுசு ராசி, பின்னர் மகரம்

வியாழக்கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

07-11-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : சேமிப்புகள் மேம்படும்.
கிருத்திகை : அலைச்சல் ஏற்படும்.

ரிஷபம்

புதிய துறை சார்ந்த தேடல்களும், கற்பதிலும் ஈடுபாடு உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இறை வழிபாட்டிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நேர்மறை சிந்தனைகளுடன் எதிலும் செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : மதிப்புகள் மேம்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.

மிதுனம்

சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாகப் பிரிவினை செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். பழமையான சில விஷயங்களால் அமைதியின்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.

கடகம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அறிமுகங்கள் ஏற்படும்.
பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நெருக்கம் மேம்படும்.

சிம்மம்

உடனிருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். செயல்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

மகம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
பூரம் : முக்கியத்துவம் அதிகரிக்கும்.
உத்திரம் : உற்சாகமான நாள்.

கன்னி

கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும். துன்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.

துலாம்

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் உண்டாகும். படிப்பில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : சுறுசுறுப்பான நாள்.
விசாகம் : வாதங்கள் மறையும்.

விருச்சிகம்

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். இழுபறியான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தனுசு

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உங்கள் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். சமூகப் பணிகளில் மாறுபட்ட சூழல் ஏற்படும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

மகரம்

சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : குறைத்துக் கொள்ளவும்.

கும்பம்

சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : புரிதல்கள் உண்டாகும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.

மீனம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750