07/06/2025. இன்றைய ராசிபலன்கள்.

07-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 24
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ துவாதசி – Jun 07 04:48 AM – Jun 08 07:18 AM

நட்சத்திரம்

சித்திரை – Jun 06 06:33 AM – Jun 07 09:39 AM

ஸ்வாதி – Jun 07 09:39 AM – Jun 08 12:42 PM

கரணம்

பவம் – Jun 07 04:48 AM – Jun 07 06:04 PM

பாலவம் – Jun 07 06:04 PM – Jun 08 07:18 AM

யோகம்

வரியான் – Jun 06 10:12 AM – Jun 07 11:17 AM

பரீகம் – Jun 07 11:17 AM – Jun 08 12:17 PM

வாரம்

சனிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:05 AM
சூரியஸ்தமம் – 6:32 PM

சந்திரௌதயம் – Jun 07 3:26 PM
சந்திராஸ்தமனம் – Jun 08 3:26 AM

அசுபமான காலம்

இராகு – 9:12 AM – 10:45 AM
எமகண்டம் – 1:52 PM – 3:25 PM
குளிகை – 6:05 AM – 7:38 AM

துரமுஹுர்த்தம் – 07:44 AM – 08:34 AM

தியாஜ்யம் – 03:57 PM – 05:45 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:53 AM – 12:43 PM

அமிர்த காலம் – 02:56 AM – 04:45 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:29 AM – 05:17 AM

ஆனந்ததி யோகம்

காரணம் Upto – 09:39 AM
ஸித்தி

வாரசூலை

சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

சூர்யா ராசி

சூரியன் ரிஷபம் ராசியில்

சந்திர ராசி

துலாம் (முழு தினம்)

சனி கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

07-06-2025 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வழக்குகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : மேன்மையான நாள்.
பரணி : குழப்பங்கள் விலகும்.
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரிஷபம்

குடும்ப வருமானம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

மிதுனம்

போட்டி விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் அனுசரித்து செயல்படவும். எதிலும் அலைச்சல்கள் ஏற்படும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது மன அமைதியைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். விவேகமான செயல்கள் நன்மதிப்பை உண்டாக்கும். புதிய வீடு மற்றும் செல்வச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அனுகூலம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

புதுவிதமான துறை சார்ந்த தேடல் ஏற்படும். தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : தேடல் ஏற்படும்.
பூரம் : நம்பிக்கை பிறக்கும்.
உத்திரம் : தெளிவு உண்டாகும்.

கன்னி

மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பழைய சரக்குகளின் மூலம் ஆதாயம் அடைவார்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சஞ்சலங்கள் குறையும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : உற்சாகமான நாள்.

துலாம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : ஆதரவு ஏற்படும்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களினால் நன்மைகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்குப் பின்பு நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : அலைச்சல் உண்டாகும்.
கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

தனுசு

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேலோங்கும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : அபிவிருத்தியான நாள்.

மகரம்

ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பயணங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆர்வம் கூடும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

கும்பம்

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் வரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளின் இடத்தில் மதிப்பு உயரும். சிந்தனைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் உண்டாகும்.
ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.

error: Content is protected !!