01/06/2025 இன்றைய ராசிபலன்கள்

01-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 18
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சஷ்டி – May 31 08:15 PM – Jun 01 07:59 PM

சுக்ல பக்ஷ சப்தமி – Jun 01 07:59 PM – Jun 02 08:35 PM

நட்சத்திரம்

ஆயில்யம் – May 31 09:07 PM – Jun 01 09:36 PM

மகம் – Jun 01 09:36 PM – Jun 02 10:55 PM

கரணம்

கௌலவம் – May 31 08:15 PM – Jun 01 08:01 AM

சைதுளை – Jun 01 08:01 AM – Jun 01 08:00 PM

கரசை – Jun 01 08:00 PM – Jun 02 08:11 AM

யோகம்

துருவம் – May 31 10:43 AM – Jun 01 09:11 AM

வியாகாதம் – Jun 01 09:11 AM – Jun 02 08:20 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:04 AM
சூரியஸ்தமம் – 6:30 PM

சந்திரௌதயம் – Jun 01 10:57 AM
சந்திராஸ்தமனம் – Jun 01 11:40 PM

அசுபமான காலம்

இராகு – 4:57 PM – 6:30 PM
எமகண்டம் – 12:17 PM – 1:50 PM
குளிகை – 3:24 PM – 4:57 PM

துரமுஹுர்த்தம் – 04:51 PM – 05:40 PM

தியாஜ்யம் – 10:10 AM – 11:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:52 AM – 12:42 PM

அமிர்த காலம் – 07:57 PM – 09:35 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:28 AM – 05:16 AM

ஆனந்ததி யோகம்

வஜ்ரம் Upto – 09:36 PM
முத்தகம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் ரிஷபம் ராசியில்

சந்திர ராசி

ஜூன் 01, 09:36 PM வரை கடகம் ராசி, பின்னர் சிம்மம்

ஞாயிறு கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

01-06-2025 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வேலைகள் முடிவுபெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அஸ்வினி : தாமதம் உண்டாகும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். சிலருடைய அறிமுகங்களால் நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். புதுவிதமான யூகங்களை அறிவீர்கள். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : வரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

மிதுனம்

நெருக்கமான உறவுகள் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் அமையும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணிப்பொறித் துறையில் மேன்மை ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.

கடகம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்துகொள்வீர்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : வாதங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தற்பெருமையான பேச்சுக்களைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : சேமிப்புகள் குறையும்.

கன்னி

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். சோர்வுகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவலைகள் குறையும்.
அஸ்தம் : பயணங்கள் கைகூடும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
சுவாதி : அமைதியான நாள்.
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

விருச்சிகம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். பிடிவாதப் போக்கினைக் குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அதிர்ஷ்டகரமான நாள்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.

தனுசு

சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாகக் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : தாமதமான நாள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகரம்

சுபகாரியம் சார்ந்த செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.
திருவோணம் : பொறுப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்‌.

கும்பம்

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்பு உயரும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அவிட்டம் : மதிப்பு உயரும்.
சதயம் : உதவிகள் சாதகமாகும்.
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

மீனம்

உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இழுபறியான சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்பறிந்து செயல்படவும்.
ரேவதி : அன்யோன்யம் ஏற்படும்.

error: Content is protected !!