இன்றைய ராசிபலன்கள் 03/08/2024

இன்றைய ராசிபலன்கள்.
ஆடி : 18 சனிக்கிழமை_
 ஆகஸ்ட் 03/08/2024.

மேஷம் -ராசி.

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் அறிவுத்திறன் வெளிப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

அஸ்வினி : மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி : அறிவுத்திறன் வெளிப்படும்.
கிருத்திகை : தெளிவான நாள்.

ரிஷபம் – ராசி.

விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
ரோகிணி : நெருக்கம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்- ராசி.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.பேச்சுத்திறமை மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : இழுபறியான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் – ராசி.

துணைவர்வழி உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். கூட்டு வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மறதியால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : தாமதம் உண்டாகும்.

சிம்மம் – ராசி.

வெளியூர் சார்ந்த பணிகள் சாதகமாகும். தர்க்க வாதங்களில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சில தடைகள் மூலம் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மகம் : பணிகள் சாதகமாகும்.
பூரம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி – ராசி.

சிந்தனைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், தொடர்பும் கிடைக்கும். பணிகளில் சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.

துலாம் – ராசி.

உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், உத்வேகமும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
சுவாதி : அலைச்சல் அதிகரிக்கும்.
விசாகம் : உத்வேகமான நாள்.

விருச்சிகம் – ராசி.

இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மருத்துவத் துறைகளில் லாபம் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

விசாகம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
அனுஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
கேட்டை : மாற்றமான நாள்.

தனுசு – ராசி.

குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். பழைய பாக்கிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருக்கவும். மற்றவர்களின் கருத்துகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

மூலம் : பொறுமையை கையாளவும்.
பூராடம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.

மகரம் – ராசி.

பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுப காரிய செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : துரிதம் உண்டாகும்.
அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

கும்பம் – ராசி.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.

மீனம் – ராசி.

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாஸ்திரம் சார்ந்த பணிகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
ரேவதி : குழப்பங்கள் நீங்கும்.