இன்றைய ராசிபலன்கள் 16/09/2024

இன்றைய ராசிபலன்கள் 

16-09-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஆவணி 31
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி.

சுக்ல பக்ஷ திரயோதசி – Sep 15 06:12 PM – Sep 16 03:10 PM

சுக்ல பக்ஷ சதுர்தசி – Sep 16 03:10 PM – Sep 17 11:44 AM

நட்சத்திரம்

அவிட்டம் – Sep 15 06:49 PM – Sep 16 04:33 PM

சதயம் – Sep 16 04:33 PM – Sep 17 01:53 PM

கரணம்

சைதுளை – Sep 16 04:45 AM – Sep 16 03:10 PM

கரசை – Sep 16 03:10 PM – Sep 17 01:30 AM

வனசை – Sep 17 01:30 AM – Sep 17 11:44 AM

யோகம்

சுகர்மம் – Sep 15 03:13 PM – Sep 16 11:41 AM

த்ருதி – Sep 16 11:41 AM – Sep 17 07:48 AM

திங்கட்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 6:15 PM

சந்திரௌதயம் – Sep 16 5:02 PM
சந்திராஸ்தமனம் – Sep 17 5:12 AM

அசுபமான காலம்

இராகு – 7:43 AM – 9:13 AM
எமகண்டம் – 10:44 AM – 12:14 PM
குளிகை – 1:44 PM – 3:15 PM

துரமுஹுர்த்தம் – 12:38 PM – 01:26 PM, 03:03 PM – 03:51 PM

தியாஜ்யம் – 10:57 PM – 12:22 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:50 AM – 12:38 PM

அமிர்த காலம் – 07:07 AM – 08:34 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto – 04:33 PM
அமுதம்

வாரசூலை

சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

திங்கள்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

16-09-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : சோர்வான நாள்.
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்

புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வர்த்தக துறைகளில் புதுவிதமான உத்திகள் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழல் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். திறமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

மிதுனம்

ஆரோக்கிய விஷயங்களில் பொறுமை வேண்டும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக செயல்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : சேமிப்புகள் மேம்படும்.
திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

கடகம்

சமூகப் பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். இன்சூரன்ஸ் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையான சூழ்நிலையும் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : அமைதியின்மையான நாள்.

சிம்மம்

எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்களும், புதுவிதமான அனுபங்களும் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார சிக்கல்கள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.

கன்னி

காது தொடர்பான உபாதைகள் அகலும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பங்காளி உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : வித்தியாசமான நாள்.
அஸ்தம் : உதவிகள் சாதகமாகும்.
சித்திரை : பொறுப்புகள் குறையும்.

துலாம்

வாக்கு சாதுரியம் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவிதை மற்றும் இலக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் விவேகத்துடன் செயல்பட்டு முடிவெடுப்பது நன்மையளிக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.

விருச்சிகம்

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்கவும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : சுறுசுறுப்பின்மையான நாள்.

தனுசு

முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுமை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திராடம் : புதுமையான நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வாக்கு சாதுரியம் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்பம்

சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். உங்கள் மீது இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

மீனம்

மனதில் தன, தான்ய விருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப பெரியோர்களுடன் கலந்து ஆலோசிப்பது மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.