வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரிமீயர் ஷோ அமெரிக்காவில் பல திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.!!

சென்னை 15 செப்டம்பர் 2022 வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரிமீயர் ஷோ அமெரிக்காவில் பல திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிலம்பரசன் டிஆர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிலம்பரசன் டிஆரின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் பிரிமீயர் ஷோ படக்குழுவினர் திட்டமிடப்பட்டு இருந்தார்கள்.

ஆனால் வெந்து தணிந்தது காடு படக்குழுவினர் கண்டெண்ட் கொடுப்பதில் தாமதம் ஆனதால் பல திரையரங்குகளில் பிரிமீயர் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்போது வெறும் 50 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிலம்பரசன் டிஆரின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள்.

error: Content is protected !!