ராவண மவன்டா..! ஜனநாயகனின் 4வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது !
ராவண மவன்டா..! ஜனநாயகனின் 4வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது !
சென்னை 03 ஜனவரி 2026 இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள’ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கலை தினத்தன்று ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தளபதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ தான் தளபதி நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால் இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
அண்மையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
‘ஜன நாயகன்’ வெளியீடு தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே, ஜன நாயகன் திரைப்படத்தில் இருந்து தளபதி கசசேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில் நேற்று 4வது பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் நேற்று இரவு 7.50 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.











